உலகம் முழுவதும் சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு இளம்பெண்ணிற்கு எதிராக ஒரு கொடூர குற்றம் ஒன்று அரங்கேறியுள்ளது. இளம் பெண் ஒருவரை ஒருநபர் சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அவில்(29). இவர் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஒரு இளம்பெண்ணை தன்னுடைய வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர்,”என்னுடை பிறந்தநாள் அன்று முதல் அப்துல் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். நான் எவ்வளவு முயன்றும் என்னால் தடுக்க முடியவில்லை. இதன்காரணமாக அவர் என்னை வழு கட்டாயமாக அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றார்.
மேலும் அங்கு கூட்டி சென்று 4 நாட்கள் உணவு, தண்ணீர் ஆகிய எதுவும் எனக்கு தராமல் பாலியல் வன்கொடுமை செய்தார். அத்துடன் என்னை துன்புறுத்தியும் வேதனை அடைய செய்தார். அவருடைய பிடியிலிருந்து நான் தப்பி வந்து என்னுடைய உறவினர் உதவியை நாடினேன்” எனத் தெரிவித்தார். அவருடைய புகாரின் பெயரில் காவல்துறையினர் அப்துல் அவிலை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்துல் அவிலுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில்,”இது மிகவும் மோசமான வழக்கு. ஒருவர் ஒரு பெண்ணை இப்படி சித்திரவதை செய்திருக்க கூடாது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெரும் உதவியாக இருந்தது. இதுபோன்று பல வன்முறைகளில் இருக்கும் பெண்கள் முன்வந்து அவர்களுடயை புகார்களை தெரிவிக்க வேண்டும். நாங்கள் எப்போதும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:ஸ்பேஸ்எக்ஸில் பாலியல் துன்புறுத்தல்கள்… கண்டுகொள்ளாத நிர்வாகம்; பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கை!