ஆசியாவில் முக்கியமான நாடுகளில் ஒன்று வியட்நாம். அந்த நாட்டின் வடக்கு மாகாணம் பு தோ. இந்த மாகாணத்தில் உள்ள டைபூன் யாஹி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


அங்குள்ள சிவப்பாறு மேலே 30 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. தொடர் மழை காரணமாக அந்த ஆறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.


இந்த சூழலில், நேற்று காலை அந்த பாலத்தின் மீது வாகனங்கள் பரப்பபாகச் சென்று கொண்டிருந்த சூழலில் திடீரென பாலம் உடைந்து ஆறின் உள்ளே விழுந்தது. இதனால், பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தது.






அங்கே கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த நபரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியது. அதிர்ஷ்டவசமாக அந்த காருக்கு முன்பு பைக்கில் சென்றவர் உடைந்து ஆற்றில் விழுந்த பாலத்திற்கு சில மீட்டர் தொலைவிற்கு முன்பே வண்டியை நிறுத்திவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாலம் உடைந்து ஆற்றில் விழுந்த சம்பவத்தில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 பேர் வரை மாயமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் வியட்நாம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.