ஹெலிக்ஸ் பாலம், சிங்கப்பூர்



918 அடி நீளம் உள்ள இந்த பாலம் மனிதனின் DNA- வடிவில் இருக்கும். இந்த பாலத்தில் சைக்கிளிங், வாக்கிங், ஸ்கேட்டிங் மட்டுமே செய்ய முடியும். இந்த பாலம் 2007 ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்டு 2010ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. சிங்கப்பூரில் உள்ள மெரீனா செண்டர் மற்றும் மெரீனா சவுத் பகுதிகளை இணைக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் முழுக்க ஸ்டெயிலெஸ் ஸ்டீலை கொண்டு கட்டப்பட்டுள்ளது. 


கேட்ஸ் ஹெட் மில்லினியம் பாலம், இங்கிலாந்து



இங்கிலாந்தில் புகழ்பெற்ற டைம்ஸ் நதிக்கரையில் ஜூன் 2001ஆம் ஆண்டு கட்டப்பட்டு அக்டோபர் மாதம் 2001 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த பாலத்தை மேல் நோக்கி தூக்க முடியும். இதனால் கப்பல்கள் எளிதாக நதிக்கரையை கடந்து செல்லமுடியும். இந்த பாலம் மக்கள் நடப்பதற்காகவும், ஸ்கேட்டிங்க் செய்வதற்காகவும் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு கண் சிமிட்டி பாலம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த பாலமும் மக்கள் சைக்கிளிங், ஸ்கேட்டிங் செய்வதற்காக கட்டப்பட்டது. 413 அடி நீளமும் 16 அடி அலமும் உள்ள இந்த பாலத்தில் பைக் சாகசங்களுக்கு புகழ் பெற்றது. 


ரூயி பாலம், சீனா



ரூயி பாலத்திற்கு வளைந்த பாலம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. சீனாவில் உள்ள ஜிஜியாங் ப்ரோவின்ஸ் பகுதியில் உள்ள இந்த பாலம் 460 அடி உயரத்தில் 318 அடி நீளத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டில் இப்பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள பாலம் முன்னோக்கி செல்வதற்கும், கீழே உள்ள இரண்டு பாலம் பின்னோக்கி வருவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பேன்போ பாலம், தென்கொரியா



சியோல்- யோங் சான் மாவட்டங்களை இணைக்கும் இரட்டை அடுக்கு பாலமாக இப்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் நீளமான பவுண்டென் பிரிட்ஜ் என உலக கிண்ணஸ் சாதனையில் இடம்பெற்றுள்ள இப்பாலத்தில் செயற்கை நீர் வீழ்ச்சி அமைப்புகளும் செய்யப்பட்டுள்ளது. 3740 அடி நீள பாலத்தில் 10,000 எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட்டு ரம்யமாக காட்சியளிக்கு இப்பாலம் 1980 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்டு 1988 ஆண்டில் முடிக்கப்பட்டது.


கோல்டன் பாலம், வியட்னாம்



இயற்கை அழகு நிறைந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தை இரண்டு பெரிய கைகள் தாங்கி பிடிப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 492 அடிநீளமும் கடல் மட்டத்தில் இருந்து 1416 அடி உயரமும் கொண்ட இப்பந்த பாலம் வியட்னாமில் உள்ள பானா மவுண்டென் பகுதியில் கட்டப்பட்டுள்ளது, 2017ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு 2018ஆம் ஆண்டிலேயே இப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


பாந்த்ரா-வோலீ பாலம், இந்தியா



மும்பையில் கடலுக்கு இடையே இருக்கும் பாந்த்ரா மற்றும் வோலீ பகுதிகளை இணைக்கும் 5.5 கிலோ மீட்டர் நீள இப்பாலம், கடந்த 2000ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கப்பட்டு 2009ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தினசரி 37500 வாகனங்கள் இப்பாலத்தில் பயணித்து வருகின்றது பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் இப்பாலம் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பாலத்தில் புகைப்படம் எடுத்து செல்வது பிரபலாமாகி வருகிறது.


ஜாங்ஜியாஜி கண்ணாடி பாலம், சீனா



சீனாவில் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட இந்த பாலம்தான் உலகிலேயே நீளமான உயரமான கண்ணாடி பாலமாகும். 1410 அடி நீளமும், 20 அடி அகலமும் இருக்கும் இந்த கண்ணாடி பாலம், 980 அடி உயரத்தில் கட்டப்படுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இப்பாலத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் நடக்கலாம்.


தி ட்விஸ்-நார்வே



ரேன் சில்வா நதியில் மிகப்பெரிய பெட்டியை வளைத்து வைத்துள்ளதுபோல் காட்சி அளிக்கும் இந்த பாலம் கடந்த 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. வெளியே 90 டிகிரி அளவில் வளைந்து செங்குத்தாக இருந்தாலும், உள்ளே சமமான தரைத்தளத்தை கொண்டுள்ளது. இந்த பாலத்தின் உள்ளே உலக புகழ் பெற்ற பல ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


மேக்டிபர்க் தண்ணீர் பாலம்- ஜெர்மனி



வழக்கமாக பாலங்கள் மனிதர்கள் நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவுமே கட்டப்பட்டு வரும் நிலையில் ஜெர்மனியின் எல்பீ நதியையும்- மிட் லேட் கால்வாயையும் இணைக்கும் இந்த பாலம் தண்ணீர் செல்வதற்காக கட்டப்பட்டது. கடந்த 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இப்பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி இருந்தாலும் கடந்த  2003 ஆம் ஆண்டில் தான் திறக்கப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டதால் மிட்லேட் கால்வாயை 12 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை மாறி, இந்த பாலத்தின் வழியாகவே படகுகள் செல்கின்றன. 3012 அடி நீளமும், 14 அடி ஆழமும் உள்ள இந்த பாலத்தில் ஓரம் மக்கள் நடந்து செல்லவும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.


வெல்வியூமர் அக்டுடக் பாலம், நெதர்லாந்து



இந்த பாலம் பல சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது. பாலத்தில் ஒரு பகுதி இடையில் நீரில் மூழ்கி உள்ளது போல் காட்சியளிக்கும் இந்த பாலத்தின் இடையில் சுரங்க பாதை இணைப்பு உள்ளது.  கடந்த 2002 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த பாலத்தில் தினசரி 28 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. வழக்கமாக தண்ணீர் அதிகமாக இருக்கும் பகுதிக்கு இடையே பாலம் கட்டுவது வழக்கமாக இருக்கும் நிலையில்,  தண்ணீர் செல்ல பாலம் கட்டிவிட்டு அதற்கு அடியில் வாகனங்கள் செல்லும் படி இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி நுழையும் வாகனங்கள் நீரில் மூழ்கி உள்ள சுரங்கப்பாதை வழியாக நுழைந்து அடுத்த பகுதிக்கு வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.