அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெரும் முயற்சிகளுக்குப் பின், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் சென்ற ட்ரம்ப், அமைதி ஒப்பந்தத்ல் கையெழுத்திட்டதோடு, அந்நட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ட்ரம்ப், போரை நிறுத்துவதில் தான் திறமையானவன் என்றும், சமானம் செய்வதில் சிறந்தவன் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளா. அவர் பேசியது குறித்து தற்போது பார்க்கலாம்.
“புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல்“
காசா போர், அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான பேரை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றிய ட்ரம்ப், போர் நிறுத்தத்தை கொண்டாடவும், அதற்கான பிணைக் கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இஸ்ரேலுக்கு சென்றார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது, இந்த ஒப்பந்தம் போரை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்து மத்திய கிழக்கில் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான கதவைத் திறந்ததாக அறிவித்தார்.
மேலும், இது போர் முடிவு மட்டுமல்ல, இது புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல் என்றும், அமெரிக்காவை போல இஸ்ரேலுக்கு பொற்காலம் ஏற்படும் என்றும் ட்ரம்ப் கூறினார். பல வருட இடைவிடாத போர் மற்றும் முடிவில்லா ஆபத்திற்குப் பிறகு, இன்று வானம் அமைததியாக இருக்கிறது என தெரிவித்த அவர், துப்பாக்கிகள், சைரன்கள் அமைதியாக இருக்கின்றன, இறுதியாக ஒரு அமைதியான புனித பூமியில் சூரியன் உதிக்கிறது என குறிப்பிட்டார்.
"பணயக்கைதிகள் திரும்பி வந்துவிட்டார்கள், அதைச் சொல்வது மிகவும் நன்றாக இருக்கிறது," என்று கூறிய ட்ரம்ப், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக "நாங்கள் எங்கள் நேரத்தை வீணடிப்பதாக நிறைய பேர் கூறினர்", ஆனால் இந்த சாதனையை எட்டியதற்கு பல "சிறந்த அமெரிக்க தேசபக்தர்களுக்கு நன்றி, நாங்கள் இதை அடைந்தோம்" என்றும் கூறினார்.
“எனது ஆளுமை போரை நிறுத்துவது“
மேலு, "8 மாதங்களில் 8 போர்களை நீங்கள் தீர்த்து வைத்தால், அது உண்மையில் உங்களுக்கு போர்கள் பிடிக்காது என்று அர்த்தம். நான் கொடூரமாக இருப்பேன் என்று எல்லோரும் நினைத்தார்கள். நான் எல்லோருடனும் போர் செய்யப் போகிறேன் என்று ஹிலாரி கிளிண்டன் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு போருக்குச் செல்லும் ஆளுமை இருப்பதாக அவர் கூறினார். ஆனால், எனது ஆளுமை போரை நிறுத்துவது பற்றியது என்று நான் நினைக்கிறேன்" என்றும் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.
அரபு, இஸ்லாமிய நாடுகளுக்கு ட்ரம்ப் நன்றி
அதோடு, அரபு மற்றும் இஸ்லாமிய உலகத்தைச் சேர்ந்த மத்தியஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸை வலியுறுத்த ஒன்றிணைந்த அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய உலக நாடுகளுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், தங்களுக்கு நிறைய உதவி கிடைத்ததாகவும், தாங்கள் சந்தேகிக்காத நிறைய பேரிடமிருந்து தங்களுக்கு நிறைய உதவி கிடைத்ததாகவும், அதற்காக அவர்களுக்கு மிக்க நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த நாடுகள் அனைத்தும் அமைதியில் பங்காளிகளாக இணைந்து செயல்படுவது, இஸ்ரேலுக்கும் உலகிற்கும் கிடைத்த நம்பமுடியாத வெற்றி என்றும் தெரிவித்தார்.