பொதுவாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அது உடன் விளையாடி அதிக நேரத்தை செலவிடுவது வழக்கம். அந்தவகையில் அந்த பிராணிகளுக்கு தங்களால்  முடிந்த சில விஷயங்களை கற்று தருவதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். அதேபோன்று ஒரு நாய் தன்னுடைய உரிமையாளரிடம் இருந்து வரைய கற்றுக் கொண்டு அழகாக படம் ஒன்றை வரைகிறது. 


இதுதொடர்பாக வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. மேரி என்ற வெளிநாட்டு பெண் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் நாய் வரைய உபயோகிக்கும் பொருட்களை முதலில் நம்மிடம் வந்து காட்டி பின்னர் வரைவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  அந்த நாய்க்கு சீக்ரட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய நாய் தொடர்பாக மேரி அந்தப் பதிவில் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். 


அதில், "என்னுடைய சீக்ரட் ஒரு சூர்யகாந்தி பூவை எனக்காக வரைந்துள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து சிறப்பாக வரைந்து மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம். குறிப்பாக பல புதிய விஷயங்களை சீக்ரட் மிகவும் விரைவாக கற்றுக் கொண்டு வருகிறது. அத்துடன் வரையும் வடிவங்களையும் தற்போது சீக்ரட் கண்டறிய தொடங்கியுள்ளது. இது தான் என் நாய் வரைந்த முதல் படம்" என மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பதிவை செய்துள்ளார். 


 






இவரின் இந்தப் பதிவை இதுவரை 1.8 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ பதிவேற்றம் செய்து இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை அதற்குள் இவ்வளவு பெரிய வரவேற்பை இந்த வீடியோ பெற்றுள்ளது. இது தொடர்பாக ஒருவர், "நான் இதுவரை சில நாய்கள் வரைவதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில் இது தான் மிகவும் சிறந்தது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் எப்படி இந்த நாய்க்கு இப்படி வரைய கற்றுக் கொடுத்தீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் இவ்வளவு அழகாக உள்ளது. உங்களுக்கு வாழ்த்துகள் என்றும் பதிவிட்டி வருகின்றனர். 


மனிதர்களே சிலர் ஓவியம் வரைய தடுமாறி பயந்து நிற்கும் சூழலில் நாய் ஒன்று சிறப்பாக ஓவியம் வரைந்துள்ளது பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. விலங்கு ஒன்றே சரியான பயிற்சியுடன் ஒரு காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கிறது என்றால் நாமும் சரியான முயற்சியுடன் முயற்சி செய்தால் எல்லாம் சாத்தியமாகும் என்பது தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. 


மேலும் படிக்க: ஜமால் கசோகியின் நண்பர்களிடமும் ஊடுருவிய பெகசஸ் ஸ்பைவேர் - வெளியான அதிர்ச்சி தகவல்