சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் கொரோனா பாதிப்பிற்கு தற்போது மீண்டும் இயல்பு நிலையை எட்ட தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பசிபிக் பெருங்கடல் மற்றும் இமய மலைப் பகுதிகளின் மேலே ஏன் விமான போக்குவரத்து எப்போதும் நடப்பதே இல்லை? இதற்கான காரணம் என்ன?
சர்வதேச விமான போக்குவரத்து சேவை இப்பகுதிகளில் நடக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. அவை
1. எமெர்ஜென்சி லெண்டிங்:
விமான பயணத்தின் போது விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அப்போது உடனடியாக விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழல் உருவாகும். இந்த எமெர்ஜென்சி லெண்டிங்கை சமப் பரப்பளவில் உள்ள நிலப்பகுதிகளில் செய்ய முடியும். ஆனால் மலை மற்றும் கடற்பகுதிகளில் இந்த மாதிரி விமானத்தை உடனடியாக தரையிறக்க முடியாது. ஆகவே தான் பசிபிக் கடற்பகுதி மற்றும் இமயமலை பகுதிகளில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை.
2. அடிக்கடி மாறும் பருவநிலை சூழல்:
விமான போக்குவரத்திற்கு சீரான பருவநிலை சூழல் இருந்தால் நல்லது. இதன் காரணமாக தான் விமானங்கள் அனைத்தும் ட்ரோபோஸ்பியர் (Troposphere) என்ற அடிவளிமண்டலத்திற்கு மேலே பயணம் செய்யும். ஏனென்றால் பூமியில் நிகழும் அனைத்து பருவநிலை மாற்றங்களும் அடிவளிமண்டலத்திற்கு கீழே நடைபெறும். இமயமலை மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே பருவநிலை சூழல் விமானம் பறப்பதற்கு ஏற்புடையதாக இல்லை. எனவே அங்கு விமானங்கள் பறப்பதில்லை.
3. ராணுவ காரணங்கள்:
இமயமலை பகுதிக்கு அருகே இரு புறங்களிலும் இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினர் தங்களது பயிற்சி மற்றும் ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக இமயமலை பகுதியின் மேல் ஒரு சில இடங்களில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.
4. காற்று கொந்தளிப்பு (ஏர் டர்பூலன்ஸ்):
பசிபிக் கடற்பகுதி மற்றும் இமயமலை பகுதியில் காற்று கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஏர் டர்பூலன்ஸ் அதிகமாகும் சூழல் உருவாகி விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவதும் அதன் ஆட்டத்தை கட்டுபடுத்துவம் மிகவும் கடினமாக அமையும்.
5. ரேடார் சேவை இன்மை:
விமான சேவையில் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்று ரேடார் பயன்பாடு. விமானங்கள் ஆகாயத்தில் பறக்க தொடங்கிய உடன் தரையில் உள்ள கட்டுப்பாட்டு தளங்களுடன் ரேடார் உதவியுடன் இணைந்து இருக்கும். இமயமலை மற்றும் பசிபிக் பகுதிகளில் இந்த ரேடார் சேவை மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே இது விமானங்கள் பறக்க கடும் சிக்கலை ஏற்படுத்தும்.
6. விமான ஆக்சிஜன் சேவை குறைய வாய்ப்பு:
விமான பயணத்தின் போது ஆகாயத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் விமானத்தில் இருக்கும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படும். பொதுவாக இந்த ஆக்சிஜன் 20 நிமிடங்கள் வரை தாங்கும் அளவிற்கு தான் சேகரித்து வைக்கப்படும். மீண்டும் இதில் ஆக்சிஜன் நிரப்ப வேண்டும் என்றால் விமானம் 10,000 அடிக்கு கீழாக பறக்க வேண்டும். இமயமலை 10,000 அடிக்கு கீழே பறந்தால் விமானம் மலையில் மோதி விபத்திற்கு உள்ளாகி விடும்.
7. இமயமலையின் உயரம்:
இமயமலையின் சராசரி உயரம் 20 ஆயிரம் அடியாக உள்ளது. பயணிகள் விமானங்கள் போதுவாக 30,000 அடியில் பறக்கும். அப்படி விமானங்கள் இமயமலையில் பறந்தால் மலைப்பகுதிக்கு மிகவும் அருகில் பறக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது விமானிகளுக்கும் பெரிய சிக்கலை தரும்.
8. வரைப்படமும் பூமியும்:
பூமியின் வரைப்படத்தில் இருப்பதை போல் நிஜத்தில் பூமி இருப்பது இல்லை. ஆகவே இமயமலை மற்றும் பசிபிக் கடல் பரப்பில் சிறியளவில் மாற்றங்கள் இருக்க கூடும். இவற்றை கணித்து விமானத்தை இயக்குவது மிகவும் சவாலான ஒன்று. ஆகவே இந்த இடங்களில் விமானத்தை விமானிகள் இயக்குவதில்லை.
9. இடையே தரையிரங்க விமான நிலையம்:
பொதுவாக நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்கள் நேராக தன்னுடைய இலக்கிற்கு செல்லாமல் நடுவில் ஒரு சம தூரம் கொண்ட விமான நிலையத்தில் தரையிறங்கி செல்வது வழக்கம். ஏனென்றால் அது விமானத்திற்கு ஒரு பாதுகாப்பான நடைமுறையாக அமையும். இப்படி பசிபிக் கடற்பகுதி மற்றும் இமயமலை வழியாக சென்றால் செய்ய முடியாது. ஏனென்றால் அங்கு நடுவே தரையிறங்க விமான நிலையங்கள் இல்லை.
10. இந்தியா-சீனா உறவு:
இமயமலையை சுற்றியுள்ள இரண்டு பெரிய நாடுகள் இந்தியா மற்றும் சீனா தான். இந்த இருநாடுகளுக்கும் இடையே விமான போக்குவரத்து மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக சீனாவின் மேற்கு பகுதியில் மக்கள் அதிகளவில் வசிப்பதில்லை. ஆகவே அப்பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்படுவதில்லை. இந்தியா-சீனா இடையே இருக்கும் விமான சேவையும் இமயமலை வழியாக இயக்கப்படுவதில்லை.
மேலும் படிக்க: கோபத்தின் விலை ரூ.23 லட்சம்.. பிரேக் அப் செய்த காதலன்; காஸ்ட்லி பைக்கை எரித்த கடுப்பு காதலி..!