ஐ லவ் யூ சொன்னப் போனவருக்கு தங்கள் நிறுவன ஊழியர் இடையூறு செய்ததால் மக்களின் கோபத்துக்கு ஆளான டிஸ்னி லேண்ட் சம்பந்தப்பட்ட ஜோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.


வெளிநாடுகளில் புரோபோஸ் செய்வது என்பது ஆண், பெண்ணின் மிகவும் உணர்வுப்பூர்வமான தருணமாக பார்க்கப்படுகிறது. அந்த புரோபோஸலுக்குப் பிறகு தான் அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அதனால் புரோபோஸலுக்கு வெளிநாடுகளில் அதிக முக்கியத்துவம் உண்டு. அதை கணவு போல் அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவு.


அப்படியொரு இளைஞர் தனது கனவு நாளில் காதலிக்கு புரோபோஸ் செய்யவிருந்த நேரத்தில் இடையூறு ஏற்பட்டது. அந்த இடையூறுக்கு டிஸ்லி லேண்ட் மன்னிப்பு கேட்டுள்ளது.


டிஸ்னி லேண்டில் உள்ள ஸ்லீப்பிங் ப்யூட்டி சிலை அருகே தன் தோழியுடன் நின்றிருந்த இளைஞர், திடீரென புரோபோஸில் மண்டியிட்டார். அந்தப் பெண் ஆச்சர்யத்துடன் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் மனதில் பறக்க காத்திருக்க பையில் இருந்து மோதிர டப்பாவை எடுத்தார். மோதிரத்தை எடுக்க முயன்றபோது ஒரு இன்டர்கட் வந்தது. அதை இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. டிஸ்னி லேண்ட் ஊழியர் அவர். அந்த நபர் இளைஞரிடம் நீங்கள் காதலைச் சொல்லுங்கள். ஆனால் அதை படியில் இருந்து இறங்கிச் சொல்லுங்கள் என்று கூறி தன் கடமையை கண்ணும் கருத்துமாக செய்தார்.
ஆனால் புரோபோஸல் மனநிலையில் இருந்த இளைஞரும், அதை எதிர்பார்த்து மிதந்து கொண்டிருந்த இளம் பெண்ணும் கனவு கலைந்தது போல் நொந்துபோயினர்.


இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகளும் கவனித்து அந்த ஊழியரை வசைபாடினார்கள்.






இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதற்கு டிஸ்னி லேண்ட் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த நிகழ்வுக்காக நாங்கள் வருந்துகிறோம். சம்பந்தப்பட்ட ஜோடியிடம் நாங்கள் மன்னிப்பு கோரியதோடு. அதே நொடியை திரும்பவும் சரியாக அரங்கேற்ற உதவுவதாகவும் கூறினோம் என்று தெரிவித்துள்ளது டிஸ்னி லேண்ட் நிர்வாகம்.


இதற்கிடையில் சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை காண்போரின் இதயம் நொறுங்காமல் இருக்காது. காதல் எத்தனை அழகான உணர்வு. பூ பூக்கும் ஓசை போன்ற அந்த உணர்வை பூகம்பம் போல் அந்த ஊழியர் சிதைத்திருக்கிறார் என்று நினைக்க வைக்கிறது.


ஆனால் நெட்டிசன்கள்விட்டதாக தெரியவில்லை. காதலுக்கு இடையூறு செய்த கறார் ஊழியரை கண்டபடி விளாசி வருகின்றனர்.


அதில் ஒருவர், அந்த ஊழியர் கடமையை செய்தாரா இல்லை அந்த காதல் தருணத்தை சிதைக்க திட்டமிட்டே அப்படி செய்தாரா என்று யோசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு நபர், அந்த ஊழியர் அந்த நிமிடத்தை கெடுத்ததில் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். இவ்வாறாக விதவிதமாக அந்த ஊழியரை இணையவாசிகள் திட்டித் தீர்க்கின்றனர்.