ஆபரணங்களில் பல வகைகள் உண்டு. அதில், வெள்ளி, தங்கம்,பிளாட்டினம், வைரம் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுபவை. குறிப்பாக வைரம் விலை உயர்ந்த ஒரு ஆபரணமாக உள்ளது. எள்ளளவு வைரம் வேண்டுமென்றால் பணத்தை அள்ளிக்கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு விலை உயர்ந்த வைரம் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரம் என்றதுமே எதோ கடுகளவு சைஸ் என நினைத்துவிடாதீர்கள்.. ஒரு கிரிக்கெட் பந்தை விட பெரியது. நம்ம முடிகிறதா? அதனால் தான் இந்த வைரம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரமாக உள்ளது.


அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் கிடைப்பது போல ஆப்பிரிக்க  நாடான போட்ஸ்வானாவில் வைரம் கிடைக்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் சுரங்கங்களில் வைர வேட்டை நடைபெறுகிறது. அப்படியான ஒரு வைர வேட்டையில் சிக்கியுள்ளது இந்த 1098 காரட் அளவுள்ள வைரம்.இது 7.3 செமீ நீளம், 5.2 செமீ அகமல், 2.7 செமீ தடிமன் கொண்டதாக உள்ளது. இது உலகின் மூன்றாவது பெரிய வைரமாகும். முதல் பெரிய வைரம்1905ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிம் கண்டுபிடிக்கப்பட்டது. 3106 காரட் கொண்ட் குளினம் கல் ஆகும். 2015ம் ஆண்டு இரண்டாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 1109 காரட் அளவு கொண்ட இந்த வைரம் டென்னிஸ் பந்து அளவை ஒத்தது. இந்த நிலையில் தற்போது 3வது பெரிய வைரமும் அதே நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 971 காரட் அளவு கொண்ட வைரமே மூன்றாவது பெரிய வைரமாக இருந்தது. அந்த வைரம் 1983ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.




இந்த வைரத்தை இந்த வைரத்தை அரசுடன் கைகோத்து வைர வேட்டையில் ஈடுபடும் டப்ஸ்வானா என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. டப்ஸ்வானா நிறுவனம் வைர வேட்டை தொடங்கி 50 ஆண்டுகளாகி உள்ளது. தங்கள் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பெரிய வைரம் இதுதான் என தெரிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் '' இந்த வைரம் உலகின் பெரிய மூன்றாவது வைரமாகும். இதனை விற்பனை செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த வைரத்தை டி பியர்ஸ் சேனல் மூலமாகவோ, அல்லது அரசுக்கு சொந்தமாக ஓகாவாங்கோ வைர நிறுவனம் மூலாமகவோ விற்பனை செய்வோம் என்றது.


வைரம் குறித்து பேசிய அந்நாட்டின் கனிமவள  அமைச்சர் லெஃபோகோ மோகி, '' இந்த வைரத்துக்கு இதுவரை பெயரிடப்படவில்லை. கொரோனா பரவலால் வைர வியாபாரமே பின் தங்கி இருக்கும் நிலையில் இந்த பெரிய வைரம் கிடைத்துள்ளது. இந்த வைரத்தின் விலை இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை. முன்னதாக 2017ல் விற்பனை செய்யப்பட்ட வைரத்தால் கிடைத்த 53 மில்லியன் டாலர் நாட்டின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட்டது என்றார்.




பெரிய வைரத்தை போட்ஸ்வானா அதிபர் மோக்விட்சி கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரம், கொரோனா பிரச்னை சீரடைந்து பின்னர் ஏலம் விடப்படும் என போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது. வைர ஏலத்தில் கிடைக்கும் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது


‛ஆல் அக்கியூஸ்ட் பேவரிட் நேபாள்’ அப்படி என்ன தான் இருக்கு நேபாளத்தில்!