பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மீது அவருடைய முன்னாள் மனைவி அம்பர் ஹேர்ட் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் நேற்று அந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜானி டெப் மீதான குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் ஆம்பர் ஹேர்டிற்கு 15 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.


இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஜானி டெப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நீதிபதி என்னுடைய வாழ்க்கையை எனக்கு திருப்பி தந்திருக்கிறார். இந்த வழக்கின் தொடக்க முதலே இதில் இருக்கும் உண்மையை வெளியே கொண்டு வருவதாகவே இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். 






இந்தத் தீர்ப்பு தொடர்பாக அம்பர் ஹேர்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று நான் அடைந்த ஏமாற்றத்தை கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. மலை போல் ஆதாரங்கள் இருந்தும் என்னுடைய கணவருக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.


 






இந்த தீர்ப்பு என்னைவிட பிற பெண்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனென்றால் ஒரு பெண் உண்மையை வெளியே பேசினாலும் அவரை அதிகாரம் மூலம் ஒன்றுமில்லாமல் செய்ய முடியும் என்பதை இது உணர்த்துகிறது. ஒரு அமெரிக்கராக சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேசும் உரிமையை நான் இழந்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண