கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் இந்திய-அமெரிக்க பேராசிரியரான ஷீனா ஐயங்கார் பாலின பாகுபாடு செய்ததாகவும், தேவையில்லாத வேலைகளை தன்னை செய்யச் சொன்னதாகவும், அதனால் தனது ஒப்பந்தம் நீக்கப்பட்டதாகவும் முன்னாள் மாணவி குற்றம் சாட்டி உள்ளார்.


பெண்களை இழிவுபடுத்தும் வேலைகள்


நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பார்வையற்ற இந்திய-அமெரிக்க பேராசிரியரான ஷீனா ஐயங்கார் மீது பாலின பாகுபாடு செய்ததாக முன்னாள் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, எலிசபெத் பிளாக்வெல் ஷீனா ஐயங்காருடன் ஆராய்ச்சியில் பணியாற்றியுள்ளார். அப்போது எலிசபெத் பிளாக்வெல்லை, ஷீனா ஐயங்கார் ஒப்பனை மற்றும் உணவகங்களை முன்பதிவு செய்தல் போன்ற பெண்களை வேலைகளை செய்யச் சொன்னார் என்று கூறப்படுகிறது.



மேக்கப் செய்துவிட சொல்வார்


52 வயதான கண்பார்வையற்ற ஷீனா ஐயங்கார் பிளாக்வெல்லை தனது தனிப்பட்ட பணிகளை செய்வதற்காக பயன்படுத்திக்கொண்டதாக கூறியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் அறிக்கை கூறியது. ஷீனா ஐயங்காருக்கு மேக்கப் செய்துக் கொடுத்தல், அவரது காதலருடன் டேட்டிங் செல்வதற்கு உணவகங்களை முன்பதிவு செய்தல் ஆகிய பணிகள் செய்ததாக பிளாக்வெல் ஒரு பேட்டியில் கூறியதாக வாஷிங்டன் ஸ்கொயர் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: வரதட்சணையாக பைக் வாங்கி தராத மாமனார்: ஆத்திரத்தில் மனைவி மீது கணவர் செய்த வெறிச்செயல்...!


சக ஆண் பணியாளருக்கு இந்த தடை இல்லை


ஷீனா ஐயங்கார் ஒரு கொலம்பியா பிசினஸ் ஸ்கூல் பேராசிரியரும், "தேர்வு கலை" ஆசிரியரும் ஆவார். பிளாக்வெல் இந்த வழக்கில், தனது ஆண் சக பணியாளர் இதுபோன்ற எந்த தடைகளையும் சந்திக்கவில்லை என்று வாதிட்டார். "என்னை போலவே அங்கு வேலை செய்த ஆண் பணியாளருக்கு இது போன்ற வேலைகளை அவர் கொடுத்ததே இல்லை", என்றார். ஷீனா ஐயங்கார் அவருடன் வேலை செய்த சக ஆண் பணியாளருக்கு பல ஆராய்ச்சி சம்மந்தபட்ட வேலைகளை வழங்கியுள்ளார். பிளாக்வெல் "அவர் ஒரு பெண்" என்பதால் அவர் ஆராய்ச்சி கடமைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்.



ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது


பிளாக்வெல், பாலின அடிப்படையிலான பாகுபாடு நடத்தை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் செய்ததாகவும், தன் வேலைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் பேராசிரியை மீது குற்றம் சாட்டினார். ஜனவரி 2019 இல், கொலம்பியா பல்கலைக்கழகம் பிளாக்வெல்லை பணிநீக்கம் செய்தது, அவரது பதவி நீக்கப்பட்டதாகக் கூறி, புகார் கூறுகிறது. மேலும், பிளாக்வெல்லுக்கு தனது ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பிறகு, வேலை கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தால் வேலை கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், அதனால் மனச்சோர்வு அடைந்ததாகவும், பதற்றம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல மனநலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்ததாகவும் குறிப்பிடுகிறார். அதனை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறியுள்ளார்.