இலங்கையில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அரசு அவசர கால சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.இது போராட்டங்களை கட்டுப்படுத்த உதவும் என்றாலும் கூட நாட்டின் வருமானத்தை வெகுவாக பாதித்திருக்கிறது.இலங்கையைப் பொறுத்தவரை சுற்றுலா அந்த நாட்டின் மிக முக்கிய வருமான ஈட்டும் வழிகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ், கனடா, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் என்று சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வருகின்றனர்.


கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் கனடா ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இந்தியாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள்.ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை ஒப்பிடும் பொழுது  ஆயிரங்களிலேயே இருக்கின்றது.இங்கிலாந்திலிருந்து ஏறக்குறைய 9 ஆயிரம் பேறும் இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 6 ஆயிரம் பேரும் வந்திருக்கிறார்கள்.இது கடந்த காலங்களைக் காட்டிலும் ஆக குறைவு.


அடுத்து வருகிற ஆகஸ்ட் மாதம் இலங்கையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் மாதமாகும்.ஆனாலும் தற்சமயம் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் அவசரகால சட்டம்,போக்குவரத்து கட்டுப்பாடுகள் என இருப்பதினால் வரவிருக்கும் மாதங்களுக்கான ஹோட்டல் முன்பதிவுகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரத்து செய்து இருப்பதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது.


45 சதவீத அளவுக்கு தங்கும் விடுதிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.இதனால் இதைச் சார்ந்து இருக்கும் போக்குவரத்து துறை, சுற்றுலாத்தலங்களில் இருக்கும் உணவு விடுதிகள் என மொத்த சுற்றுலா திட்டங்களும் ரத்து செய்யப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவினாலும் கூட வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு சரியான அளவில் செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா ஐரோப்பியாவில் சில நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என பல நாடுகள் தங்கள் நாட்டின் மக்களுக்கு இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கின்ற காரணத்தினால், இலங்கை அரசு சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்திற்கும் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றிற்கு சிறப்பான முன்னேற்பாடுகளை செய்து இருந்த போதிலும் கூட சுற்றுலாத்துறை பாதிக்கு பாதி சரிவடைந்து இருக்கிறது.