சீனாவில் உள்ள பகுதிகளில் கடந்த இரண்டாடுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை 3,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர். இது கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி பதிவான கொரோனாவை தற்போது அதிகமாக அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் என்ற பகுதியில் உள்ள 90 லட்சம் மக்களை கொண்ட அந்த மாகாணம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இதுவரை ஆறு கட்டங்களாக பெரிய அளவில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சீனாவில் உள்ள 19 நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சாங்காய் மற்றும் தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் மூட்டப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதுவரை மூன்று மற்றும் நான்காம் அலை பரவலை நாடுகள் சமாளித்து வருகின்றன.
கொரோனா வைரஸ் முதல் அலையின் போதே சீனா போக்குவரத்து தட, ஊரடங்கு உள்ளிட்டவைகள் மூலம் நோய் தொற்று பரவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இப்போது சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இது குறித்து சீனா சுகாதரா துறை கூறுகையில், ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக் கூடியது. போதிய அளவு மருத்துவ கட்டமைப்புகள் இல்லாமல் போனால் அதைத் தடுப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
சீனா கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஷாங்காய் நகரில் ஒரு நாள் ஊரடங்கை அமல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே, இரண்டு ஆண்டுகள் கொரோனா பாதிப்புகளால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது சரியானதாக இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் சீனா அரசிடம் தெரிவித்துள்ளன. மக்கள் வைரஸ் உடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.