வெனிசுலாவில் ஒரு ஆணுறையின் விலை ரூ.60 ஆயிரம் வரை விற்கப்படும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பழமை வாய்ந்த கருத்தடை சாதனங்களில் ஒன்றான ஆணுறை தேவையில்லாத நேரங்களில் கர்ப்பம் தரிப்பதை தடுக்கவும், எய்ட்ஸ் போன்ற நம்மை பாதுகாக்கவும் செய்கிறது. உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே மாதக்கணக்கில் முடங்கினர். பலருக்கும் ஆண்டுக்கணக்கில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 


இந்த காலக்கட்டங்களில் ஆணுறையின் விற்பனை தாறுமாறாக அதிகரித்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.இதேபோல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் மாதத்தில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான Reckitt ரஷ்யாவில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் durex ஆணுறை என்பதால்  ஆணுறைக்கு என்ன செய்வது என அச்சமடைந்த மக்கள் அதனை வாங்கி வீட்டில் குவித்ததால் விற்பனை அதிகரித்தது.  கடந்த வருட மார்ச் மாத ஆணுறை விற்பனையை இந்த வருட மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் சுமார் 170% விற்பனை அதிகரித்தது.


இந்நிலையில் வெனிசுலாவில் ஒரு ஆணுறையின் விலை தங்கத்தின் விலையை விட அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் இருப்பதால்  கருத்தடை சாதனம் முதல் கருக்கலைப்பு மாத்திரைகள் வரை நடைமுறையில் உள்ளது. இதனைப் பயன்படுத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பும் நடைபெறுவது வழக்கம்.





ஆனால் வெனிசுலாவில் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் ஆகும் என்பதால் மக்கள் கருத்தடை சாதனங்களின் விலை தாறுமாறாக உள்ளது. அதாவது ஒரு ஆணுறையின் விலை ரூ.60 ஆயிரம் வரை விற்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கருத்தடை மாத்திரைகளின் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் போட்டிப் போட்டுக் கொண்டு கருத்தடை பொருட்களை மக்கள் வாங்குகின்றனர். 


வெனிசுலாவில் சிலர் மாதந்தோறும் தங்கள் சம்பளத்தில் பாதியை ஆணுறை, மாத்திரைகள் போன்ற கருத்தடை மருந்துகளுக்காக செலவிடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் உள்ளூர் கருத்தடை மாத்திரை தயாரிப்புகளை விரும்பாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த மாத்திரைகளை மக்கள் வாங்க விரும்புவதால் விலை தாறுமாறாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண