வரும் ஜூன் மாதத்தில் வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்கி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வால் நட்சத்திரம்:
வானியலின் அற்புத நிகழ்வாக அவ்வப்போது ஆச்சர்யமூட்டும் பல நிகழ்வுகள் நடக்கும். அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் முன்பே கணித்து தெரிவிக்கின்றனர். அதில் சில நிகழ்வுகளை நாம் வெறும் கண்ணால் பார்க்க கூடியதாக இருக்கிறது. சிலவற்றை தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கிறது.
இந்நிலையில், 12 பி பான்ஸ்-புரூக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட வால் நட்சத்திரமானது சுமார் 30 கி.மீ அளவிலான மைய பகுதியை கொண்டுள்ளது. இது 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
வால் நட்சத்திரமானது விண்வெளியில் உள்ள பனி, தூசு மற்றும் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இவை சூரியனுக்கு அருகிலோ, வளிமண்டலத்தில் வரும் போது வெப்பம் காரணமாக பனித்துகள் ஆவியாகிறது. அப்போது வெளிப்படும் வெப்ப ஒளியானது, நமக்கு ஒளி காட்சியாக தெரிகிறது.
12 பி பான்ஸ்-புரூக்ஸ் நட்சத்திரமானது, ஜூன் மாதத்தில் பூமிக்கு அருகே வர உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வெறும் கண்களுக்கு தெரியுமா என்பது குறித்தான தகவல் இல்லை. ஆனால், சிறந்த தொலைநோக்கி இந்த அற்புத நிகழ்வை காணலாம்.
12 பி பான்ஸ்-புரூக்ஸ் நட்சத்திரமானது, வியாழன் குடும்ப நட்சத்திரம் என்றும் சிலர் கருதுகின்றனர். ஏனென்றால் வியாழன் கோளின் ஈர்ப்பு விசையால், இந்த நட்சத்திரம் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
வானில் தென்பட்ட நிகழ்வு:
இதற்கு முன்பு, இந்த வால் நட்சத்திரமானது, 1385 ஆம் சீனாவிலும், 1457 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்தும் பார்க்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த வால் நட்சத்திரமானது , தற்போது வரும் ஜூன் மாதத்தில் பூமிக்கு அருகே வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு அருகே நெருங்கி வரும்போது, இதை பூமியின் வட அரைக்கோளத்தில் இருந்து பார்ப்பது சாத்தியம் குறைவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களில் நட்சத்திரத்தை எங்கு இருந்து பார்க்கலாம் என்பது குறித்தான தகவலும் , வெறும் கண்ணால் பார்க்கலாமா என்பது குறித்தான தகவலும் விஞ்ஞானிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும்.
இதையடுத்து, இந்த வால் நட்சத்திரமானது வரும் 2095 ஆண்டுதான் தெரியவரும் கூறப்படுகிறது.
Also Read: Taiwan Earthquake: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய தைவான் நாடு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு!