Colombia Earthquake: கொலம்பியாவில் இன்று அதிகாலையிலேயே திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் மக்கள் அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது.


கொலம்பியா நிலநடுக்கம்:


உலகின் பல்வேறு இடங்களில் சமீப காலமாகவே நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை கூட கொலம்பியாவில் 6.3 ரிக்டர் அளவுகோலில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரம் கிழத்து 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களில் உணரப்பட்டது.  இந்த நிலநடுக்கம் நள்ளிரவு  12.04 மணியளவில் எல் கால்வாரியோ நகரத்தில், பொகோட்டாவிலிருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. வில்லவிசென்சியோ, புகாரமங்கா, துஞ்சா மற்றும் இபாகு நகரங்களிலும் உணரப்பட்டது. 


இந்த நிலநடுக்கத்தால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து வெளியே வந்துள்ளனர். சிலர் சாலைகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், வீடுகள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்தும் சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.


வீடியோ:






இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.  நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, ஒரு பெண் குடியிருப்பு கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவர் தற்போது உயிரிழந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 






முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். 2008 ஆம் ஆண்டில், கொலம்பியாவில்  5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 11 பேர் இறந்தனர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை சோகமாக்கிய நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.




மேலும் படிக்க