அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஒரு பெண்ணின் உத்தரவுக்கு இணங்க வீட்டின் வாயில் கதவைச் சாத்தும் கரடியின் செயல் அடங்கிய இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோக்களில் ஃபன்னி பேபி வீடியோஸுக்கும், க்யூட் அனிமல் வீடியோஸுக்கும் தனிச் சிறப்பான இடம் உண்டு. அந்த வகையில், கரடியின் வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.
சூசன் கெஹோ என்ற பெண், அமெரிக்காவின் கரடிகள் நல ஆர்வலர்களில் ஒருவர். அவருக்கு தனியாக யூடியூப் சேனல் ஒன்றுள்ளது. அதில் அவருக்கு 1500 வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர். அந்தச் சேனலில் அவர் அண்மையில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில், கரடிகள் ஸ்மார்ட் ஆனவை இந்தக் கரடி எப்படி எனது வீட்டின் கதவை சாத்துவது என்பதைத் தெரிந்து வைத்துள்ளது என்று தலைப்பிட்டுள்ளார்.
வீடியோவைப் பாருங்கள்:
பார்த்தீர்களா எவ்வளவு சமர்த்தாகச் சொன்னதைச் செய்கிறது இந்தக் கரடி. பொதுவாக நாய்க்குட்டிகள் வீட்டு எஜமானரின் வார்த்தைகளை மீறாமல் செயல்படும். இப்போதுதான் புதிதாக ஒரு கரடி மனித கட்டளைகளுக்கு இணங்குவதைக் காண்கிறோம்.
அந்தக் கரடி பாதியளவு கதவை சாத்த, அந்தப் பெண் இடைவெளி வழியே குளிர்ந்த காற்று வருகிறது நன்றாக மூடவும் எனக் கூறுகிறார். கரடியும் வாயால் லாவகமாக கதவைச் சாத்திவிட்டுப் போகிறது. அப்புறம் இன்னொரு புகைப்படத்தையும் அவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், நான் ரொம்ப டயர்டா இருக்கேன். அனைவருக்கும் குட்நைட் எனப் பதிவிட்டுள்ளார்.
கரடியுடன் பேசும் திறன்:
அமெரிக்காவின் வெர்னான் பகுதியைச் சேர்ந்த சூசன் கெஹோ கரடிகளுடன் பேசக் கூடியவர். 2010ல் இவருக்கு 1250 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. கரடிகளுக்கு ரேடியோ காலர் பொருத்த முயன்ற உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் பணியைச் செய்யவிடாமல் கரடிகளுடன் பேச முயன்றதற்காக அவருக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது. அவர் கரடிகளுக்கு உணவளித்தது தவறு என நீதிமன்றம் கூறியது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அவர் வேண்டுமென்றே உணவளிக்கவில்லை என்பது உறுதியானது.
நியூஜெர்ஸி மாகாணத்தின் மிகப்பெரிய பாலூட்டி விலங்கினமாக கரடி திகழ்கிறது. கரடிகள் மனிதர்கள் உண்ணும் உணவின் சுவைக்காக குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருகின்றன. நியூ ஜெர்ஸி பகுதியில் இது மக்களுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. அதனால், கரடிகளுக்கு மக்கள் உணவளிக்கக் கூடாது என்பது அங்கு சட்டமாகவே உள்ளது. அதேபோல், குப்பைகளை உடனுக்குடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். குப்பை வாடைக்கும் கரடிகள் ஈர்க்கப்பட்டு குடியிருப்புகளுக்கு வரும் என்பதால் மாகாண நிர்வாகம் அதிலும் பொது மக்களிடம் அதிக கெடுபிடி காட்டுகிறது.