கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


குறிப்பாக சமூக வலைதளங்கள் கிறிஸ்துமஸ் பாடல்கள் கொண்டாட்டங்களால் நிரம்பி வழிந்த நிலையில், மனிதர்கள் தாண்டி செல்லப்பிராணிகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஃபோட்டோக்களும் இணையத்தில் லைக்ஸ் அள்ளின.


விலங்குநல ஆர்வலர்:


அந்த வகையில், 24 வயது ஏரியல் விண்டர் எனும் பெண் தனது பாய் ஃப்ரெண்ட் மற்றும் செல்ல நாய்களுடன் தனித்துவமாக கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்த ஃபோட்டோக்கள் இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளன.


விலங்கு நல ஆர்வலரான ஏரியல் பாஃப் ஃப்ரெண்ட் லூக் மற்றும் தனது ஆறு வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த  செல்ல நாய்களுடன் மேட்சிங் கிறிஸ்துமஸ் உடை அணிந்து தன் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.


 






தனது ஒவ்வொரு அனைத்து செல்ல நாய்களுக்கும் மேட்சிங் கிறிஸ்துமஸ் உடை அணிவித்து ஏரியல் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் 3.5 லட்சம் லைக்குகளைப் பெற்று வைரலாகி உள்ளன. இதேபோல் முன்னதாக அயர்லாந்தைச் சேர்ந்த நாய்கள் பராமரிப்பு மையம் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் ஹிட் அடித்தது.


அயர்லாந்தைச் சேர்ந்த ’Dogs Trust Ireland’ எனும் நாய்களைப் பராமரித்து வரும் என்ஜிஓ நிறுவனம் ஆண்டுதோறும் தாங்கள் பராமரித்து வரும் நாய்களுக்காக ‘சாண்டா பா டே’ எனும் தினத்தைக் கொண்டாடுவது வழக்கம்.


சான்டா பா டே:


உலகம் முழுவதுமுள்ள மக்கள் இந்த தொண்டு நிறுவன நாய்களுக்கு சாண்டா பா தினத்தில் பரிசுகள் அனுப்பி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு இந்நிகழ்வு டிச.21ஆம் தேதி கொண்டாடப்பட்டது. 


இந்நிலையில், இதில் கலந்துகொண்டு பராமரிப்பு நாய்கள் பரிசுகளைத் தேர்ந்தெடுத்து மகிழும் க்யூட்டான வீடியோவை தங்கள் பக்கத்தில் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது டாக்ஸ் ட்ரஸ்ட் அயர்லாந்து நிறுவனம்.


 






பரிசுக் குவியலில் இருந்து ஒவ்வொரு நாயும் தங்களுக்கு வேண்டிய பரிசை தேடி எடுத்துச் சென்று விளையாடி மகிழும் இந்த வீடியோ 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறது.