சமூக வலைத்தளத்தில் வெளியிட கிரேனில் இருந்து லைவ் வீடியோ எடுக்க முயன்ற சீனாவைச்சேர்ந்த டிக்டாக் பிரபலம் சியாவோ க்யூமீ 160 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தச் சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


டிக்டாக் மீதான மோகம் மக்களிடையே இன்னும் குறைந்தபாடில்லை என்றே சொல்ல வெண்டும். தன்னுடைய தனித்திறமைகளை எடுத்துரைப்பதற்கு உதவிக்கரமாக இச்செயலி உள்ளது என்பதால் பலரிடம் மிகுந்த கவனத்தைப்பெற்றது. எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள வித்தியாசமாக விஷயங்களை வைத்து டிக்டாக் மேற்கொண்டு அதனைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை பலர் வழக்கமாக்கொண்டுள்ளனர். ஆனால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் இதனால் ஏற்படுகிறது. இப்படித்தான் சீனாவைச்சேர்ந்த 23 வயதான சியோவா க்யூமீ என்பவர் டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிடுவதில் மிகுந்த பிரபலமான இவர் லைவ் ஸ்டீரிமில் வீடியோ வெளியிட்ட போது 160அடி உயர கிரேனில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். 


இவரது டான்ஸ் வீடியோக்கள் சீன ரசிகர்களுக்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், வீடியோக்கள் ஒவ்வொன்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களைக் கொண்டுள்ளது.  அந்த அளவிற்கு நேர்த்தியாக டிக்டாக்கில் தனது திறமைகளை வெளிப்படுத்தக்கூடியவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளப்பொழுதிலும் இவர் டிக்டாக்கிலும், தனது கிரேன் ஆபரேட்டர் பணியிலும் மிகச்சிறப்பாக பணியாற்றக்கூடியவர். மேலும் தான் செய்யும் எந்த வொரு விஷயத்தினையும் சமூக வலைத்தளங்களில் அனைவரும் வெளியிட்டு வரக்கூடிய நிலையில், சியோவாவும் அதேப்போன்று தான் செய்து வந்துள்ளார். இப்படித்தான் சியோவா க்யூமீ கிரேன் ஆபரேட்டராக வேலைப்பார்க்கும் இடத்தில் அனைவரும் வீட்டிற்குச் சென்றப் பிறகு சமூக வலைத்தளத்தில் லைவ் வீடியோ ஒன்றினை எடுத்திருக்கிறார். அப்பொழுது கால் தடுமாறி சுமார் 160 அடி கிரேனில் இருந்து கீழே விழுந்த சியோவா பலத்த காயத்துடன் உயிரிழந்துவிட்டார். லைவ்  வீடியோ எடுத்துக்கொண்டிருந்தமையால் அவர் கீழே விழுந்தப்பொழுது எடுத்த வீடியோ பிளராகியிருக்கிறது.  சீன டிக்டாக் பிரபலம் சியோ கடைசியாக எடுத்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


இவரது மரணம் சீன மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சியோவா அவருடைய வேலையில் கெட்டிக்காரியாக இருந்து வருபவர் எனவும், எனவும், வேலை நேரத்தில் டிக்டாக் வீடியோவினை ஒருபொழுது எடுக்க மாட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் கிரேனில் இருந்து லைவ் வீடியோ எடுக்கும் பொழுது தான் இவர் உயிரிழந்துவிட்டார் எனக்கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறான இந்த சீன டிக்டாக் பிரபலத்தின் மரணம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.





 


இதேப்போன்று தான் இந்த மாத தொடக்கத்தில், ஹாங்காங்கில்,  சிங் டாய் நீரோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியின் அருகே நின்று கொண்டு படம் எடுக்க முயன்றப்பொழுது, சோபியா சியுங் நழுவி 16 அடி ஆழமுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போன்று பலர் செல்பி மற்றும் டிக்டாக் வீடியோக்கள் எடுப்பதற்காக வித்தியாசமான ஏதாவது ஒன்றினைச்செய்து உயிரிழக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.