பசி வந்தா நீ நீயா இருக்கமாட்ட என்ற பிரபலமான விளம்பரம் உண்டு, அதனால் மனிதர்களுக்கு பசி வந்தா அவர்கள் அவர்களாகவே இருக்க மாட்டார்கள். அந்த வகையில் சீனாவில் பெண் ஒருவர் சாக்லேட் என நினைத்து பட்டாசை கடித்து சாப்பிட்ட விபரீத நிகழ்வு நடந்துள்ளது


சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவைச் சேர்ந்த வு என்ற அந்த பெண்மணி தான் சாக்லேட் என நினைத்து பட்டாசை சாப்பிட்டதாக தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது..


சாக்லேட் என நினைத்து..


சீனாவில் ஷுவாங் பாவோ என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட வகை பட்டாசுகளின் பேக்கேஜிங், பால் மிட்டாய்களைப் போலவே இருக்கும், ஒரு நாள் அவரது தம்பி பட்டாசைக் கொண்டு  வீட்டில் வைத்துள்ளார், ஆனால் வூ  அதை  மிட்டாய் என்று நம்பி சாப்பிட்டுள்ளார்.


குறிப்பாக, "ஸ்மாஷ் பட்டாசு" என்று பொருள்படும்ஷுவாங் பாவோ , நெருப்பை பயன்படுத்தாமல் பற்றவைக்க முடியும். தரையில் விழும்போது அல்லது அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அது உரத்த சத்தத்துடன் வெடிக்கும், இது வூவின் விஷயத்தில், அவர் பற்களைப் பயன்படுத்தி கடித்தப்போது அவர் வாயில்பட்டு வெடித்தது. இந்த பட்டாசு சீன நாட்டில் பிரபலமாக உள்ளது மற்றும் பெரும்பாலும் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பெரிய விழாக்களின் போது பயன்படுத்தப்படுகிறது. 


இதையும் படிங்க: பெற்றோர்களே குழந்தைகளின் வாழ்க்கையை பாழாக்காதீர்கள் - டிரம்ஸ் சிவமணி வலியுறுத்தல்


எப்படி நடந்தது? 


"நான் வீட்டின் ஹால் பகுதியில் விளக்குகளை அணைத்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​என் சகோதரர் ஒரு பையில் சிற்றுண்டியுடன் வாங்கி வந்தார். அது நான் சிறுவயதில் ரசித்த டாரோ பால் மிட்டாய்களைப் போலவே இருக்கும் என்று நினைத்தேன், அதனால் ஒன்றைத் திறந்து என் வாயில் வைத்தேன். அப்போதுதான் அது வெடித்தது," என்று வூ கூறினார். 


"அந்த நேரத்தில், நான் திகைத்துப் போனேன். உண்மையைச் சொன்னால், எனக்கு எந்த வலியும் உணரவில்லை; என் வாயில் துப்பாக்கிப் பொடியின் வாசனையை நான் உணர்ந்தேன். வெடிப்பு இருந்தபோதிலும், சாப்பிடும்போதோ அல்லது பல் துலக்கும்போதோ எனக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாததால் நான் மரத்துப் போயிருக்கலாம்," என்று கூறினார்.