பெற்றோர்களே குழந்தைகளின் வாழ்க்கையை பாழாக்காதீர்கள் - டிரம்ஸ் சிவமணி வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை அரபு நாட்டு சட்டப்படி அங்கேயே பிடித்து உதைக்க வேண்டும் கடுமையான தண்டனை கொடுத்தால் தான் பயம் வரும்.

Continues below advertisement

தஞ்சாவூர்: குழந்தைகள் கையில் செல்போனை கொடுத்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என்று பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி பெற்றோர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Continues below advertisement

மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு சன்னதிகள் உள்ளன.

இக்கோயிலுக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தஞ்சை பெரிய கோயிலில் மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

இன்று தைப்பூசம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி வருகைபுரிந்தார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு அரபு நாடுகள் போல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். குழந்தைகள் கையில் செல்போனை கொடுத்து கெடுக்காதீர்கள். குழந்தைகள் கையில் செல்போனை கொடுத்துவிட்டு நீங்கள் ஃப்ரீயா இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அதனால் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது பெற்றோர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை கொடுத்துள்ளார் அதனை கண்டுபிடித்து பயன்பெறுங்கள்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை அரபு நாட்டு சட்டப்படி அங்கேயே பிடித்து உதைக்க வேண்டும் கடுமையான தண்டனை கொடுத்தால் தான் பயம் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola