சீனாவின் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 35,000க்கும் அதிகமாக பதிவாகி உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரே நாளில் 35 ஆயிரம் பாதிப்பு:


சீனாவின் தேசிய சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 002க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.  நாட்டின் தொற்று விகிதம் கடந்த வாரத்தை விட 43% அதிகமாக பதிவாகியுள்ளது.


சீனாவில் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் 91% க்கும் அதிகமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. கொரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து சீனாவில் 5,232 இறப்புகள் பதிவாகியுள்ளன. சீனா முழுவதும் தற்போது 21,000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. இது கடந்த மாதத்தை ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாகும்.


ஊரடங்கு கட்டுப்பாடுகள்:


நோய்த்தொற்றின் தொடக்கத்திலிருந்து சீனாவின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஸ்னாப் லாக்டவுன்கள் (snap lockdown), கொரோனா தொற்று பரிசோதனை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் (travel restriction) மூலம் தொற்று பரவுதலை தடுக்க சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நகரங்களில் பூங்காங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட சாயோங் மாவட்டத்தில் முழுமையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பெய்ஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அலுவல்பூர்வ எண்ணிக்கை 5,229 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 2 கோடியே 10 லட்சம் பேர் வசிக்கும் பெய்ஜிங் நகரத்தின் சில பகுதிகள் மீண்டும் பொது முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளன.


கொரோனா பரிசோதனை:


இதனால் அந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்வது கூட கடினமாக உள்ளது. சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவது அரசுக்கும், மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பின் சீனாவில் கடந்த வாரம் ஒரேநாளில் 28 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.   


வெளியூரில் இருந்து வருபவர்கள் அவர்கள் வந்த நாளிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் அனுமதிக்கும் வரை அவர்கள் பொதுவெளியில் நடமாடக்கூடாது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெய்ஜிங் மட்டுமல்லாமல் பல லட்சம் மக்கள் வசிக்கும் சீனாவின் பிற பகுதிகளிலும் அதிகாரிகளால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


சீனாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது.


முன் எப்போதும் இல்லாத  வகையில் 2020-ஆம் ஆண்டுக்கு பின் கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்துள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா:


மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 500  நபர்களுக்கு கீழ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 6, 2020 ஆண்டு பின் ஏற்படும் குறைந்த  பாதிப்பாகும். 


கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கி மூன்று  ஆண்டுகள்  ஆகிய நிலையில் மக்களுக்கு இன்றளவும் பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இந்த கொடூர வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல நாட்டு  நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளனர். இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது. கொரோனா, டெல்டா கொரோனா, ஒமிக்ரோன் அதனை தொடர்ந்து தற்போது NeocoV  என மாற்றம் அடைந்து மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.