பொதுவாக ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு சுற்றும் இரண்டு பேரை பார்த்தால் கீரியும், பாம்பும் போல் சண்டை போட்டுக் கொள்கிறார்களே என நாம் நினைப்பது உண்டு. ஆனால், கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் உண்மையில் சண்டை போடும் கீரியையும் பாம்பையும் நேரில் பார்த்தால் நாம் மெய்சிலிர்த்து, உலகின் மிகச் சிறந்த விடாப்படியான சண்டை என அதனை மெச்சுவோம்.
கீரி - பாம்பு சண்டை:
உலகில் ஆச்சர்யத்தையும் பயத்தையும் ஒருசேர வரவழைக்கக்கூடிய உயிரினங்களில் முதன்மையானவை பாம்புகள். நேரில் நம்மை உறைய வைத்து முதுகை சில்லிட வைக்கும் அதே அனுபவத்தை பாம்புகள்
வீடியோக்களிலும் வழங்குகின்றன. அத்தகைய இயல்பைக் கொண்ட பாம்பையே கீரி ஒன்று விடாப்படியாக போட்டிபோட்டு வீழ்த்தும் வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
பிறவிப் பகையாளிகள் என அழைக்கப்படும் கீரியும் பாம்பும் சண்டையிடும் இந்த வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கீரியும், கரு நாகம் ஒன்றும் விடாப்பிடியாக சண்டையிடும் சுமார் இரண்டரை நிமிட வீடியோ, 27 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று யூடியூபில் லைக்ஸையும் வாரிக் குவித்துள்ளது.
வீடியோ முழுவதும் விடாப்பிடியாக நீளும் சண்டையில் இறுதியில் கீரி பாம்பை வீழ்த்தியது போல் தெரிந்தாலும், யார் யாரை வென்றார்கள் என முடிவுக்க வர முடியாமல் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது இந்த வீடியோ!
அந்த வகையில் முன்னதாக வெகு சில நொடிகளில் வளர்ந்த முழு மானை மலைப்பாம்பு ஒன்று விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்து வருகிறது.
மானை விழுங்கும் மலைப்பாம்பின் வயிற்றை அருகில் நிற்கும் நபர்கள் தட்டிக் கொடுத்து உதவுவதும் (?!) இந்த வீடியோவில் பதிவாகி உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.