சீனாவைச் சேர்ந்த வீடற்ற நாய் ஒன்று ஏலத்தின்போது 25,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையான செய்தி வைரலாகி உள்ளது. 29 மணி நேரம், 480 ஏலதாரர்கள் பங்கேற்றிருந்த இந்த ஆன்லைன் ஏலத்தின் முடிவுதான் இன்றைய வைரல். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 18.5 லட்ச ரூபாய் ஆகும்.


ஆன்லைன் ஆக்‌ஷன் தொடங்கும்போது, 78 அமெரிக்க டாலர் மட்டுமே தொடக்கநிலை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலில் 24 மணி நேரம் நடைபெறுவதாக ஏல நேரம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உலகெங்கிலும் இருந்து ஏலதாரர்கள் விருப்பம் காட்டியதால், 24 மணி நேரத்தை கடந்து ஏலம் தொடர்ந்தது. 






டெங் டெங் என பெயர் கொண்ட இந்த சீன நாய், கடந்த 2014-ம் ஆண்டு முதல் பராமரிப்பிற்கான உரிமையாளர் இன்றி வீடற்று இருந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த உள்ளூரு செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியால், டெங் டெங் நாய் சீனாவில் பிரபலமானது. 


இந்நிலையில், ஏழாண்டுகளுக்கு பிறகு பெரிய விலை மதிப்பில் இந்த நாய் ஏலம் சென்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், ஆன்லைன் ஏலத்தை நடத்திய அலிபாபா நிறுவனம், நாயை ஏலத்தில் எடுத்த நபரின் விவரங்களை வெளியிடவில்லை.






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண