சமூக வலைதளங்களில் எப்போதும் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் தொடர்பான வீடியோ என்றால் வேகமாக வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் நாய் இருவரும் இருக்கும் வீடியோ என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. 


அதன்படி இந்த வீடியோவை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனாவில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் போது பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தன்னுடைய செல்ல பிராணி நாய் பட்டாசு சத்தத்தை கேட்டு பயப்படாமல் இருக்க அந்த நாயின் காதை அக்குழந்தை அடைப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 






அந்தக் குழந்தையின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அன்பு சூழ் உலகத்தில் இந்த குழந்தை தன்னுடைய செல்ல பிராணி மீது வைத்திருக்கும் அன்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக பலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 






இவ்வாறு பலரும் ட்விட்டர் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 4 இல்ல.. 38 பேர்.. கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் ஆஸி பத்திரிக்கை புதிய தகவல்..!