நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக ராகுல்காந்தி சில கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார். தற்போது, மு.க.ஸ்டாலினின் டுவிட்டுக்கு ராகுல்காந்தி பதில் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி, "தமிழ்நாடு மட்டுமல்லாமல் நமது நாட்டின் மற்ற அனைத்து மாநில மக்களும் எனது சகோதர, சகோதரிகள். தங்களின் கனிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இந்தியாவின் பன்மைத்துவ, கூட்டாட்சி மற்றும் கூட்டுறவு யோசனையில் நமது நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.






முன்னதாக, நாடாளுமன்றதை்தில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவரின் உரைக்கு மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது பேசிய ராகுல்காந்தி, “ உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால்(பாஜக) ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது.” என்று மத்திய அரசான பா.ஜ.க. அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசினார்.


அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய கிளர்ச்சியூட்டும் உரைக்கு, அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.










சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சாரம் கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்காக நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளீர்கள்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண