சீனாவில் சந்திர புத்தாண்டின் முதல் 40 நாள்களுக்கு மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். ஆண்டுக்கு ஒரு முறை, சீன மக்கள் மேற்கொள்ளும் இந்த பயணம்,உலகின் மிக பெரிய குடியேற்றமாக கருதப்படுகிறது.
கொரோனாவுக்கு முன்பு வரை, கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி, மக்கள் பயணம் மேற்கொண்டு வந்தார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவில் பரவு தொடங்கி உலகை ஆட்டிப்படைத்து வரும்
கொரோனா காரணமாக சீனாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
வரலாறு காணாத மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு சந்திர புத்தாண்டின் முதல் 40 நாள்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி மக்கள் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
சந்திர புத்தாண்டின் முதல் நாளான நேற்று இந்த பயணம் காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையே, வரும் 21ஆம் தேதி முதல் சந்திர புத்தாண்டின் பொது விடுமுறை தொடங்கப்பட உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன்படி, அடிக்கடி கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, மக்கள் நடமாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிப்பது, பெரிய அளவிலான ஊரடங்கு விதிப்பது ஆகியவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவிற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் குறைவான வளர்ச்சியையே சீனா பதிவு செய்தது.
தற்போது, கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதால் 17 டிரில்லியன் மதிப்பு கொண்ட பொருளாதாரம் மீண்டெழும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளர்.
ஆனால், திடீரென மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் மக்கள் மீண்டும் வைரஸ் பாதிப்பில் சிக்கியுள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, சந்திர புத்தாண்டை தொடர்ந்து வரும் 40 நாள்களில், 2 பில்லியன் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சீன போக்குவரத்து அமைச்சகம் கணித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட, 99.5 சதவிகிதம் அதிகமாகும்.