வடமேற்கு சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 230 மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தவிர பல வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.


இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமையான நேற்று இரவு 11:59 மணிக்கு 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் தாக்கியுள்ளது. 


நிலநடுக்கம் 35 கி.மீ ஆழத்தில் அதன் மையப்பகுதி கன்சுவின் மாகாண தலைநகரான லாஞொவிலிருந்து 102 கி.மீ மேற்கு - தென்மேற்கில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்கள் யார் என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று (டிசம்பர் 18) மாலை உணரப்பட்ட நிலநடுக்கத்தில் கன்சு மாகாணத்தில் 86 பேரும், அண்டை நாடான கிங்காய் மாகாணத்தில் 9 பேரும் உயிரிழந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. 






உணரப்பட்ட வலுவான நிலநடுக்கம்:


நேற்று மாலை உணரப்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். திங்களன்று சீனாவின் கன்சு மற்றும் கிங்காய் மாகாணங்களைத் தாக்கிய வலுவான நிலநடுக்கத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையான இன்று (டிசம்பர் 19) அதிகாலை வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கிங்காய் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் உள்ள கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் காரணமாக சில உள்ளூர் கிராமங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, நிலநடுக்கத்தின்போது கீழே விழுந்த வீடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகளின் நிலை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் வைரலாகி வருகிறது. 






நிலநடுக்கம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீன அதிபரின் வழிகாட்டுதலின்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணப்பணிகள் மற்றும் விரைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உட்பட மக்களை பாதுகாப்பாக மீட்க பணிகள் நடைபெற்று வருகிறது.


அந்தமானிலும் நிலநடுக்கம்:


சீனாவை தொடர்ந்து அந்த மானிலும் 4.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.