ரஷ்யாவில் ஆண்ட்ராய்டு காம்பிட் உருவாக்கிய ரோபோட், செஸ் விளையாடும்போது 7 வயது சிறுவனின் விரலை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 19 அன்று மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் ஏழு வயது சிறுவன், செஸ் விளையாடுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரோபோட்டுடன் மோதிய போது இந்த சம்பவம் நடந்தது. 






தனது முறை வரும்வரை காத்திருக்காமல் சிறுவன் வேகமாக காயை நகர்த்தியபோது, சிறுவனின் விரலை ரோபோ உடைத்ததாக ஏற்பாட்டுக் குழு தெளிவுபடுத்தியது. ஏழு வயது சிறுவன், கிறிஸ்டோபரின் விரலை ஆண்ட்ராய்டு ரோபோட் உடைத்துள்ளது. ரோபோட் தனது காயை நகர்த்துவதற்கு முன்பு, சிறுவன் தனது காயை நகர்த்தியாகக் கூறப்படுகிறது. 


இதுகுறித்து ஆய்வாளர்கள், "ரோபோவுக்கு சிறுவன் அவசரப்பட்டது பிடிக்கவில்லை. எனவே அது கிறிஸ்டோபரின் ஆள்காட்டி விரலைப் பிடித்து கடுமையாக அழுத்தியது" என தெரிவித்தனர்.


மாஸ்கோவில், ஒன்பது வயதுட்பட்ட சிறந்த 30 வீரர்களில் கிறிஸ்டோபரும் ஒருவர். 


இதுகுறித்து ரஷ்ய செஸ் கூட்டமைப்பு தலைவர் கூறுகையில், "காயை நகர்த்தும் வரை ரோபோ காத்திருந்த போதிலும், சிறுவன் விரைவாக காய் நகர்த்தியதால், ரோபோ சிறுவனின் விரலை உடைத்தது" என்றார். இதுபோன்று நடைபெறுவது இதுவே முதல் முறை எனக்கூறிய அவர், குழந்தை பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறினார்.


இது தற்செயலான சம்பவம் என்றும், செஸ் ரோபோ மிகவும் பாதுகாப்பானது என்றும் தெளிவுபடுத்திய அவர்கள், மற்றொரு பாதுகாப்பான அமைப்பை நிறுவலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். ரோபோ சிறுவனை பிடித்ததும், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரோபோவின் பிடியில் இருந்து அவரை விடுவித்தனர். 


பின்னர், மாற்று போட்டியாளர்களை கொண்டு, கிறிஸ்டோபர், போட்டியை நிறைவு செய்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் உள்ளூர் வழக்கறிஞரை அணுகி போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இது பற்றிய வீடியோ வைரலான பிறகு, இணையத்தில் பலர் ரோபோவின் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் தீங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 


சதுரங்கம் விளையாடும் ரோபோக்கள், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண