இலங்கையின் முக்கிய வர்த்தகத் துறையினர் வெளிநாடுகளில் பெரும் பகுதி பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குற்றச்சாட்டு.

 

இலங்கையின் முக்கிய வர்த்தக துறையினர் வெளிநாடுகளில் பெரும்பகுதி பணத்தை பதுக்கி வைத்திருப்பதால் இலங்கைக்கு வரவேண்டிய பணம் கிடைக்கவில்லை என  இலங்கை மத்திய வங்கிய ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தமது அமெரிக்க டாலர் வருமானத்தின் பெரும் தொகையை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பது நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில்  நாட்டிற்கு தேவையான அந்நிய செலாவணியை வழங்க மறுத்து வருகின்றனர் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஒரு மாதத்துக்கானஇலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் குறைந்தது 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  நாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். சராசரியாக மாதம் ஒன்றில் ,ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதி வருமானத்தில் கிடைப்பதாகவும் ,ஆனால் அதில் குறிப்பிட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு திரும்ப கொண்டுவரப்படவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

 

இலங்கைக்கு குறைந்தது மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் 800 மில்லியன் டாலர் வருவாய் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு இருப்பதாகவே இலங்கை வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த 800 மில்லியன் டாலர் இலங்கைக்கு கிடைக்குமானால் குழந்தைகளின் அத்தியாவசிய பால் மா இறக்குமதிக்கு அதனை பயன்படுத்தி இருக்கலாம் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ தேவைகளையும் சரி செய்து இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் 2021-ல் அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பின்படி இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை கொண்டு வரும் சட்டத்தை வர்த்தகர்கள் மீறி இருப்பதாகவே கூறப்படுகிறது.

 

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் 985 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி நடைபெற்று இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

 

அதில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் 345 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  திருப்பி கொண்டு வரப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.ஆகவே  இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ள தகவல்களில் தெரிய வந்திருக்கிறது.அதே போல் கடந்த ஐந்து மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றிருக்க வேண்டுமென அவர் தெரிவித்திருக்கிறார்.ஆனால் அதில் 20 சதவீதம் மட்டுமே ரூபாய்கள் ஆக மாற்றப்பட்டு இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.ஆகவே இலங்கைக்கு வர வேண்டிய அந்நிய செலாவணி வருமானம் டாலர்களில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது என தெரிய வந்திருக்கிறது.

 

குறைந்தபட்சம் ஏற்றுமதியாளர்கள் நாட்டுக்குள் 40 சதவீத பணத்தை யாவது கொண்டு வந்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆகவே ஏற்றுமதி வர்த்தகர்கள் இலங்கைக்கு வழங்க வேண்டிய நியாயமான வருவாயை வங்கிகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.அதே போல் கடந்த ஐந்து மாதங்களில், மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி வருமானத்தில், 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை அடைப்பதற்கு பயன்படுத்தியுள்ளதாக செலவு கணக்கு காட்டப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

ஆகவே இலங்கை ஏற்றுமதியாளர்கள்  800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதி வருமானம் செலவாகியுள்ளதாக இலங்கைக்கு கணக்கு காட்டி இருக்கிறார்கள். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாத கணக்கு எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அரசை வர்த்தகர்களே மாற்றுவதாக கூறியுள்ளார்.

 

குறைந்தது ஒரு மாதத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது இலங்கை இருக்கும் நெருக்கடியான சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏற்றுமதியாளர்களும், பெரும்பான்மையான உற்பத்தி துறையினரும் ,உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் .இலங்கை வங்கி ஆளுநர் புள்ளிவிவரங்களோடு இந்த தகவலை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.