மத்திய அமெரிக்க நாடான கவுத்மாலாவில் கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தினை கண்டித்து பெண்கள் அந்த நாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக் கோரியும், மத்திய அமெரிக்க நாட்டில் பெண்களின் கொலைகளைக் குறைக்கக் கோரியும் எல் சால்வடாரின் தலைநகரில் கடந்த சில நாட்களாக சுமார் 2,000 பெண்கள் பேரணி நடத்தினர்.


அமெரிக்காவில் சமீபத்திய கருக்கலைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கருக்கலைப்பு மாத்திரைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவித்தது. மருந்து மூலம் கருக்கலைப்பு என்பது கர்ப்பத்தை கலைக்க மிகவும் எளிதாக அணுகக்கூடிய மற்றும் விருப்பமான முறையாக மாறிவருகிறது. 


அதேபோல், கருக்கலைப்பு உரிமைகளை ஆதரிக்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனமான குட்மேச்சர் இன்ஸ்டிடியூட் வழங்கிய அறிக்கையில்,அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டில் மருந்து மூலம் கருக்கலைப்பானது 54 சதவிகிதம் என்று கண்டறியப்பட்டது. இது 2017 இல் இருந்து 39 சதவீத அதிகம் என்றும் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது. 


இந்த சட்டத்தினை எதிர்த்து கடந்த மார்ச் 8  சர்வதேச மகளிர் தினம் அன்று முதல் "இது என் உடல், கருக்கலைப்பு எனது உரிமை", "இனி ஆணாதிக்கத்திற்கு அடிபணிய மாட்டோம்" மற்றும் "பெண்கள் வலிமையானவர்கள் நாங்கள் ஒன்றாக இணைந்து எங்களை கவனித்துக் கொள்வோம்" போன்ற முழக்கங்களுடன் அவர்கள் சான் சால்வடாரில் ஊதா அல்லது பச்சை நிற தாவணியை கழுத்தில் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.






கருக்கலைப்புக்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவ உதவியை நாடிய பிறகு பல பெண்கள் அந்த முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


அதேபோல், பெண்களுக்கு எதிராக மத்திய அமெரிக்க நாட்டில் கொலை சம்பவமும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து,"பெண் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கைக்கு உரிமை உண்டு, வன்முறை மரணங்கள் இல்லை" என்று எல் சால்வடார் அரசு நடத்தும் பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு கோரிக்கை வைத்து வருகின்றனர். 


பெண்களுக்கு எதிரான வன்முறை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 2020 இல் பதிவு செய்யப்பட்ட 130 வழக்குகளை விட 2021 இல் 132 பெண்கள் கொல்லப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண