கனடா, ஒட்டா பகுதியில் ரிடியூ என்னும் ஐஸ் கட்டி ஆற்றில் ஒரு பெண் தனது வாகனத்தின் மேலே ஏறி செல்ஃபி எடுக்க முற்பட்டார். அவர் மேலே ஏறியதால் வண்டியின் எடை அதிகமாகி மூழ்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையிலும் அப்பெண் வண்டி மேலிருந்து கீழே இறங்காமல் தொடர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தார். பின்னர் அவரது வாகனம் முழுவதுமாக மூடும் நிலையில், அருகில் இருந்த பாதுகாவலர்கள் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.






இந்நிலையில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் அந்த பெண் செல்ஃபி எடுப்பதை சமூக ஊடக பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.






 






முன்னதாக வாகனம் மூழ்க ஆரம்பிக்கும்போதே அருகில் இருந்த மக்கள் அவரை எச்சரித்து உதவ முயன்றனர். ஆனால் அப்பெண் ஒத்துழக்காமல் தொடர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


சமீப காலத்தில் செல்ஃபி மோகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் இடம் பிடித்து உள்ளது. அதனால் விபரீதம் தான் அதிகரித்து காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் செல்ஃபி எதற்கெடுத்தாலும் செல்பி, அவ்வாறு எடுக்கும் செல்ஃபி போட்டோக்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறனர்.


உலகில் அனைவரும் செல்ஃபி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதனால் மிகப்பெரிய இழப்புகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சந்தோஷமான சமயங்களில் செல்ஃபி எடுக்கப்பட்ட நிலை சென்று தற்போது இறப்பு, விபத்து போன்ற துக்கமான நிகழ்வுகளிலும் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.