கனடா எல்லையில் உறை பனியில் நான்கு பேர் இறந்துகிடந்தது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கனடா எல்லையில் இந்தியாவை சேர்ந்த நான்கு பேர்களின் உடல்கள் (குழந்தை உட்பட) உறைந்த நிலையில் கிடந்தது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கடத்தல் வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்காவின் மினசோட்டா அதிகாரிகள் கூறும் போது, “ 47 வயதான ஸ்டீவ் ஷாண்ட் தென்னிந்திய எல்லையில், ஆவணமற்ற இரண்டு பேரை கடத்திச் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர்.
அமெரிக்க எல்லைப்படை அதிகாரிகள் 5 இந்தியர்கள் எல்லைப்பகுதியில் நடந்து சென்றதை பார்த்துள்ளனர். அதில் ஒருவர் ஒரு பெரிய பையை முதுகில் சுமந்து கொண்டு சென்றுள்ளார். எல்லையை கடக்க முயன்ற போது அவர்கள் அந்த குழுவிலிருந்து தனித்தனியாக பிரிந்துள்ளனர்.
மினசோட்டா எல்லையில் இருந்து 40 அடி தொலைவில் இருக்கும் போது ஒரு ஆண், ஒரு பெண், ஒரு இளைஞர், ஒரு குழந்தை ஆகியோர் இறந்து கிடப்பதாக கனடா காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அவர்கள் அனைவரும் குளிரின் தாக்கத்தால் இறந்துள்ளனர் என்பதே முதற்கட்ட அறிகுறிகளாக உள்ளது.
இது குறித்து கனடா காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, “இறந்து போனவர்கள் கடுமையான குளிரை மட்டும் எதிர்கொள்ளவில்லை. அவர்கள் அதிகமான பனிப்பொழிவையும், கடுமையான இருளையும் எதிர்கொண்டுள்ளனர். குளிந்த காற்று வெப்ப நிலையை மைனஸ் 35 செல்சியஸாக குறைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இறந்த போன அனைவரும் இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்த போனவர்கள் தங்களை யாரோ ஒருவர் அழைத்து செல்வார் என்ற நோக்கில் கிட்டத்தட்ட 11 மணிநேரம் நடையாய் நடந்துள்ளனர். இந்த விவாகரத்தில் ஷாண்ட் என்பவர் மனித கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அதிகாரிகள் வருகிற 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்