கொரோனா வைரஸின் பிடியிலிருந்து சில காலம் விடுதலை ஆகியிருந்த உலக நாடுகள் தற்போது கொரோனாவாலும், ஒமிக்ரான் வைரஸாலும் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் பல்வேறு நாடுகளில் வைரஸின் பரவல் தீவிரமடைந்துவருகிறது.


அந்தவகையில் இங்கிலாந்திலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது.




இதனைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதனால் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அந்த நாட்டில் குறைந்துள்ளது.


இதையடுத்து இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 






இதுகுறித்து அவர் பேசுகையில், “இங்கிலாந்தில் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை சரிவர கடைப்பிடித்ததால் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. இதனால் அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணியாமல் வேலைக்கு செல்லலாம். இனி வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அவசியமில்லை. இரவு விடுதிகள், பார்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன.


கொரோனா தொற்று இருப்பவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பள்ளி குழந்தைகள் நீண்ட நேரம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை.




கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்க அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கொரோனாவை தடுக்க முடியும்” என்று கூறினார்.


அதேசமயம், ஒமிக்ரானின் பரவல் வரும் காலங்களில்தான் தீவிரமடையுமென விஞ்ஞானிகள் கூறும் நிலையில் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது ஒரு தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: kolapasi Series 12 | ஆமைக்கறியின் அமைவிடம்; பரோட்டாவின் பிறப்பிடம் - தூள் கிளப்பும் தூத்துக்குடி உணவு பயணம்