வரும் ஜூன் மாதம் 22-ஆம் தேதி வரை, ஏற்கனவே அமலில் இருந்த தடை தொடரும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. கனடா அரசு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த தடைக்காலத்தில் சரக்கு போக்குவரத்திற்காக அனைத்து விமானங்களும் அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் கனடா நாட்டிற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக பயணிக்க முடியாதே அன்றி, வேறு நாடுகள் வழியாக பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பயணிக்க கனடா வருவதற்கு இறுதியாக அவர்கள் பயணித்த நாட்டில் இருந்து கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது பன்னாட்டு விமானங்கள் மூலம் கனடா வரும் மக்களிடையே கொரோனா தொற்று கண்டறியப்படுவது கணிசமான அளவு குறைந்துள்ளதாக கனடா நாட்டின் போக்குவரத்துக்கு அமைச்சர் ஓமர் அல்காப்ரா கூறியுள்ளார். இருப்பினும் புது வகை கொரோனா தொற்று தங்கள் நாட்டிற்குள் பரவாமல் இருக்க இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவில் நேற்று புதிதாக 2 லட்சத்து 57 ஆயிரத்து 299 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதே சமயம் கடந்த மூன்று நாட்களாக கணிசமான அளவில் தொற்றின் அளவு குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துவருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 630 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்து 735இல் இருந்து 2 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரத்து 365-ஆக அதிகரித்துள்ளது.