உலகம் முழுவதும் மக்களால் கொண்டாடப்படும் தலைவர்களில் ஒருவர் சே குவேரா. புரட்சிகள் மூலம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தந்த சே குவோரா இன்றும் பல இளைஞர்களுக்கு உந்துசக்தியாக உள்ளார்.


சே குவேராவின் மனைவி அலெய்டா மார்ச்சிற்கு மொத்தம் நான்கு குழந்தைகள் பிறந்தது. அதில், மூன்றாவது குழந்தையாக பிறந்தவர்தான் கேமிலோ குவாரா மார்ச். 60 வயதான இவர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு சே குவாரா ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




வெனிசுலாவில் உள்ள காராகசிற்கு பயணம் மேற்கொண்டபோது கேமிலோ குவாராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். கேமிலோ குவாரா தனது தந்தையை சிறப்பிக்கும் நிகழ்வுகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தாலும் சராசரியான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். கியூபா நாட்டின் ஹவானாவில் உள்ள சே குவாரா கல்வி மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.


மேலும் படிக்க : பெரிய சிலந்திக்களுடன் விளையாடி மகிழும் சிறுமி... வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள்!


உயிரிழந்த கேமிலா குவாராவின் தாயார் அலெய்டா மார்ச் சேகுவாராவின் இரண்டாவது மனைவி ஆவார். அவர் கடந்த 2012ம் ஆண்டு சே குவாராவுடனான தனது வாழ்க்கையை “சே குவாராவுடனான எனது வாழ்க்கை” என்று புத்தகத்தை எழுதியுள்ளார்.




1958ம் ஆண்டு சே குவாராவுடன் திருமணம் செய்த அலெய்டாவிற்கு மொத்தம் நான்கு குழந்தைகள் பிறந்தன. தற்போது உயிரிழந்த கேமிலோவுடன் அலெய்டா, செலியா மற்றும் எர்னாஸ்டோ ஆகிய சகோதர, சகோதரிகள் உள்ளனர். கியூபாவில் வசித்து வந்த கேமிலோ குவாராவின் மரணம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






கியூபா அதிபர் மிகுவல் டியாஸ்கனேல் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ஆழ்ந்த வலியுடன் நாங்கள் சே குவாராவின் மகனை, அவரது சிந்தனைகளை ஊக்குவித்த கேமிலியாவை வழியனுப்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்கள் முழுவதும் சே குவாராவின் மகன் உயிரிழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க : Gorbachev Dies : ரஷ்ய சரித்திரத்தை மாற்றிய மிக்கேல் கோர்பசேவ் காலமானார்..


மேலும படிக்க : Mikhail Gorbachev : பனிப்போருக்கு முடிவு.. மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கம்...யார் இந்த மிக்கைல் கோர்பசேவ்?