உலகின் மிகவும் பிரபலமான சாக்லேட்டாக திகழ்வது கேட்பரி. இந்த சாக்லேட்டின் சுவைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் அடிமை என்றே கூறலாம். இந்த நிலையில், இங்கிலாந்து முழுவதும் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கேட்பரி சாக்லேட்டுகளும், விற்கப்பட்ட கேட்பரி சாக்லேட்டுகளும் திரும்ப பெறுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சாக்லேட்டுகளை திரும்ப பெற்ற கேட்பரி:


லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா தொற்று அச்சத்தின் காரணமாகவே கேட்பரி சாக்லேட்டுகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது. கர்ப்பிணி பெண்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. யாரேனும் வாங்கியிருந்தாலும் சாப்பிடாமல் வாங்கிய இடத்தில் ஒப்படைத்தால் மீண்டும் பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


என்னென்ன தயாரிப்புகள்?


கேட்பரி நிறுவனத்தின் சில தயாரிப்புகள் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்ட நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்ற அபாயம் ஏற்பட்டதன் விளைவாகவே இந்த நடவடிக்கையை கேட்பரி நிறுவனம் எடுத்துள்ளது. இதன்படி, கேட்பரி நிறுவனம் தங்களது 6 தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.


கிரஞ்சி(crunchie), டைம்(Daim), ஃப்ளாக் (Flake), டெய்ரி மில்க் பட்டன்ஸ் (Dairy Milk Buttons) மற்றும் டெய்ரி மில்க் சங்க்ஸ் (Dairy Milk Chunks) ஆகியவற்றின் தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உணவு தர முகமை வாடிக்கையாளர்கள் காலவதி தேதியை கேட்பரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.


வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி:


இந்த விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் பிரபல தனியார் செய்தி நிறுவனம், மேலே குறிப்பிட்ட தயாரிப்புகளை யார் வாங்கியிருந்தாலும் சாப்பிட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அதை வாங்கிய கடைகளிலே ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு செய்தி வெளியிட்டுள்ளது.


கேட்பரி சாக்லேட்டுகளை திரும்ப பெறுவதற்கான லிஸ்டீரியாசிஸ் பாக்டீரியா ப்ளூ வைரசை ஒத்தது என்றும் எச்சரித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டால் மருத்துவர்களை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம் ஆகும். உலகப்புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் தங்களது 6 தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பது அந்த நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Fact Check: பாலியல் வன்கொடுமையை தடுக்க கல்லறைக்கு பூட்டா? வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி என்ன?


மேலும் படிக்க: Water on Mars: செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்த சீனா ரோவர்? மனிதர்கள் வாழும் சூழல் குறித்த ஆய்வு..