ஏர்பஸ் உருவாக்கிய ஜூஸ் செயற்கைக்கோள் (ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர்) ஏரியன் 5 விண்கலம் மூலம் கடந்த மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 6.2 டன் எடையுள்ள ஜூஸ் செயற்கைகோள், 5 பில்லியன் கிலோமீட்டரைத் தாண்டிய பயணத்தைக் மேற்கொண்டுள்ளது, வியாழனில் இருக்கும் நிலவுகளின் மேற்பரப்பில் நுண்ணுயிரிகளின் இருப்பு தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.






வியாழன் கோளை சுற்றி ஐஸ் நிலாக்கள் நிறைந்துள்ளது. அதில் கேனிமீட் - சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய நிலவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இது 2034 இல் புவிசுற்றுப்பாதையில் சென்று அதன் சுற்றுப்பயணத்தை முடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் இருக்கும் ரேடார்கள் நிலவுகளை தெளிவாக பார்க்க உதவும். lidar, a laser measurement device நிலவின் மேற்பரப்பை முப்பரிமான முறையில் படம்பிடிக்க உதவும். அதில் பொருத்தப்பட்டிருக்கு கேமராக்கள் எண்ணற்ற புகைப்படங்களை எடுத்து ஆய்வுக்காக அனுப்பும். இந்த செயல்பாடுகளை மேற்கொள்ள அதில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள் உதவும் என விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.


ஆனால் தற்போது அந்த செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 16 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஃபார் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் (RIME) ஆண்டெனா முழுமையாக வெளியே வர முடியாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும்  ஜூஸ் கண்காணிப்பு கேமராவின் படங்கள், செயற்கைக்கோள் அதன் நிலைப்பாட்டில் இருந்து மெதுவாக நகர்வதைக் காட்டுவதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது செயல்படும் ரேடார் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.


RIME கருவி என்பது வியாழனின் ஐஸ் நிலவுகளின் மேற்பரப்பு மற்றும் மேற்பரப்பு கட்டமைப்பை 9 கிமீ ஆழம் வரை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு பனி ஊடுருவி ரேடார் ஆகும். அந்த ரேடாரில் இருக்கும் சிறிய பின் ஆண்டெனாவை முழுமையாக விரிவடைய செய்யாமல் தடை செய்வதாக விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது. பொறியாளர்கள் விண்கலத்தை engine burn செய்ய திட்டமிட்டுள்ளனர். அதாவது ஜூஸ் செயற்கைக்கோளில் இருக்கும் என்ஜினை மீண்டும் செயல்படுத்தும் வகையில் எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தற்போது குளிர்ந்த பகுதியில்  இருக்கும் மவுண்ட் மற்றும் ஆண்டெனாவை வெப்பமாக்கி மீண்டும் முழு செயல்பாட்டில் கொண்டு வரும் என கூறுகின்றனர். இந்த சிறிய தொழில்நுட்ப கோளாறை தவிர்த்து ஜூஸ் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது என கூறியுள்ளனர். இந்த குறைபாடும் விரைவில் சரி செய்யப்பட்டும் என தெரிவித்துள்ளனர்.