பனாமாவில் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து புதன்கிழமை (15/02/2023) அதிகாலை மலையில் இருந்து விழுந்ததில் 39 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கொலம்பியாவை மத்திய அமெரிக்காவுடன் இணைக்கும் ஆபத்தான காட்டுப்பகுதியான டேரியன் கேப் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து, கோஸ்டாரிகாவின் எல்லையை ஒட்டிய மேற்கு கடற்கரை மாகாணமான சிரிக்கியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயங்கரமான சத்தத்துடன் மலையில் இருந்து சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில்  பேருந்தில் இருந்த 66 பயணிகளில் 39 பேர் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாகவே  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 


சுமார் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளனர் என்று பனாமாவின் சமூக பாதுகாப்பு ஆணையம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.