ஆப்பிரிக்க கண்டம், தி டார்க் கான்டினன்ட் என்றழைக்கப்படுவதாலேயே அது வறுமைக் கண்டம் என்று பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளது.ஆனால் உண்மையில் ஆப்பிரிக்கக் கண்டம் அத்தனை வளமானது. நைல் நதிக்கரையில் தோன்றிய மனித வரலாறு அதற்கு ஒரு சான்று.


ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்


ஆப்ரிக்காவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்ரிக்கா கண்டத்தில் தாமிரப் பயன்பாடு சாம்ராஜியங்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியுள்ளன . வெண்கலம் கி.மு 3000 முதலே புழக்கத்தில் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உயர்தர உலோகங்கள் சாம்ராஜ்ஜியங்கள் இருந்த பொழுது புழக்கத்திற்கு வந்துள்ளன என அறியப்படுகின்றது. கி.மு பத்தாயிரம் வாக்கில் வடமேற்கு ஆப்ரிக்கா , எகிப்து, மற்றும் நுபியா ஆகிய பகுதிகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.


ஆப்பிரிக்க கண்டத்தில், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனி ஆதிக்கம் தொடங்கியுள்ளது. ஆப்ரிக்கா கண்டத்தின் சுதந்திரம் லிபியாவிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. லிபியா 1951-இல் விடுதலைப்பெற்றது. லிபியாவில் தொடங்கி 1960 காலகட்டம் வரை ஆப்ரிக்காவிற்கு தொடர்ந்து விடுதலைகள் கிடைக்கப்பெற்றன. 




புருண்டியின் வறுமை:


புருண்டி, இது முன்னர் உருண்டி என அரியப்பட்டது. ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் காங்கோ ஜனநாயகக் குடியரசையும் கொண்டு முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். மேற்கு எல்லையின் பெரும் பகுதி தங்கனியகா  ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது.
இங்கு துவா, ஹுடு, துட்ஸி இன மக்கள் 500 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதி 20 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியின் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் சிறிது காலம் பெல்ஜியம் பிடியில் இருந்தது. 


புருண்டி காலனி ஆதிக்கத்தில் விடுபட்டு சுதந்திர நாடாகிவிட்டது. 1962ல் சுதந்திரம் பெற்றது. ஆனால் அங்கு, முடியாட்சி மோதல்கள் பின்னர் அரசியல் படுகொலைகள், ராணுவக் கிளர்ச்சிகள் என்று அடுத்தடுத்து போராட்டங்கள். இரண்டு உள்நாட்டுப் போர்கள் நடந்துவிட்டன. 1970, 1990 என இரண்டு முறை நடந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலைகள் அரங்கேறின. இதனால் பொருளாதாரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட புருண்டி சரியான நிர்வாகம் இல்லாததால் வறுமையில் வாடுகிறது. அங்குள்ள இளைஞர்கள் பலர் வாழைத்தார்களை சந்தைகளுக்கு சைக்கிளில் சுமந்து சென்று சம்பாதிக்கின்றனர்.


30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சந்தைக்கு ஒவ்வொரு இளைஞரும் சைக்கிளில் 200 கிலோ எடை கொண்ட வாழைத்தார்களை ஏற்றிச் செல்கின்றனர். ஆபத்தான சைக்கிள் பயணம் ஆனால் இந்திய மதிப்பில் ரூ.450 கூலிக்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர். அன்றாட வாழ்வு கூட சிலருக்கு எவ்வளவு சிரமம் என்பதை இதைப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.