துருக்கி நாட்டில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் பர்சாஸ்போர் மற்றும் அமெட்ஸ்போர் என்ற உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.


இந்தப் போட்டியில் துருக்கியின் பராம்பரிய இனமான குர்து மக்கள் அதிகம் வாழும் பகுதியை சேர்ந்த அணி பங்கேற்று விளையாடினர். இந்த அணி விளையாட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து எதிர்த்தரப்பினர் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 


போட்டி தொடங்கியது முதல் முடியும் வரை குர்திஷ் எதிர்ப்பு கோஷங்களை பர்சாஸ்போர் ரசிகர்கள் பாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


இதையடுத்து அமெட்ஸ்போர் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பர்சாஸ்போர் அணியின் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து தாக்கும் வீடியோவை நேரடியாக பகிர்ந்தது. தொடர்ந்து இந்த தாக்குதலை பல்வேறு கிளப் அணிகளும் சமூக ஊடங்களில் வெளியிட்டனர். அமெட்ஸ்போர் இந்த சம்பவத்தை பர்சாஸ்போரின் தாக்குதல் என்று தலைப்புயிட்டு வீடியோவாக வெளியிட்டனர். 






மைதானத்திற்கு மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்தாலும், திட்டமிட்டபடி ஆட்டம் நடைபெற்றது. போட்டி நடைபெற்ற 90 நிமிடங்கள் முழுவதும் இரு ரசிகர்களுக்கிடையே ஆக்ரோஷம் தொடர்ந்தது. தொடர்ந்து, ரசிகர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள், பட்டாசுகள் மற்றும் கத்தி உள்ளிட்ட பொருட்களை வீசினர். 


போட்டி முடிந்து கடைசி விசில் அடித்தப்பிறகு இரு அணிகளின் ரசிகர்களிடையே சண்டை நடந்துள்ளது. தடுக்க சென்ற தனியார் பாதுகாப்பு மேற்பார்வையாளர், கிளப் பாதுகாப்பு அதிகாரி, கிளப் ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் டிரஸ்ஸிங் ரூம் தாழ்வாரத்தில் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 






இன எதிர்ப்பு:


இந்த சம்பவம் குறித்து துருக்கி கால்பந்து சம்மேளனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


கடந்த சில ஆண்டுகளில், அமெட்ஸ்போர் துருக்கியில் பல சர்ச்சைகளுக்கு வெடித்தது. வெளியூர் விளையாட்டுகளின் போது, அந்த அணியின் மீது தொடர்ந்து குர்திஷ் எதிர்ப்பு கோஷங்களுக்கு எழுந்துள்ளது. இத்தகைய போட்டிகள் பெரும்பாலும் வன்முறை விவகாரங்களாக முடிவடையும்.அமெட்ஸ்போர் விளையாட்டின் போது குர்திஸ்தானின் கொடியை உயர்த்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.






இறுதி விசிலுக்குப் பிறகு அரங்கில் இருந்து பொருட்களை வீசுவது தொடர்ந்ததால், அமெட்ஸ்போர் அணிக்கு ஆடுகளத்திலிருந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.