அமெரிக்காவின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று பர்னிங் மேன் திருவிழா. இது ஒன்பது நாட்கள் நடைபெறும் கலை மற்றும் கலாச்சார விழா. 1986ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவின் பேகர் கடற்கரையில் லாரி ஹார்வி நண்பர்களால் முதன் முதலாக இவ்விழா கொண்டாடப்பட்டது. பார்ப்பதற்கு வித்தியாசமாக ஆடைகளை அணிந்துக்கொண்டு  உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து நெவடா பாலை வனத்தை நோக்கி மக்கள் படையெடுப்பார்கள்.


அங்கு தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட கிரியேட்டிவ்  சிலைகள் ,  கண்காட்சிகள் , ஆடல் பாடல் என கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. விழாவின் முக்கிய செயலாக மரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட  சிலை ஒன்றை எரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் . சற்று வேடிக்கையானதாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிறு தொடங்கி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமை (அமெரிக்க தொழிலாளர் தினம்) வரை இவ்விழா  நடைபெறும்.






கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காராணமாக இவ்விழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நடைப்பெற்றது. 9 நாட்கள் விழாவை முடித்துக்கொண்டு மக்கள் ஒரே நேரத்தில் நெவடா பாலைவனத்திலிருந்து புறப்பட்டத்தால் தீவு பகுதியே , பிஸியான சிட்டி போல போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் மக்கள் வாகன நெரிசலில் சிக்கியுள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகம் நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பார்ப்பதற்கு மேட் மேக்ஸ் திரைப்படத்தில் வரும் காட்சி போல இருக்கிறது என சில கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.







தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பர்னிங் மேன் திருவிழாவிற்கு, உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வினோதமான ஆடைகளை அணிந்துகொண்டு வாரத்தில் விருந்துக்கு வந்தனர்.இந்த விழாவில் கிட்டத்தட்ட  80,000 பேர் பங்கேற்றிருந்ததாக தெரிகிறது.