பல்கேரியா நாட்டில் உள்ள கடற்கரையில் 30 நிமிடம் வெயிலில் உறங்கிய பெண்ணின் நெற்றியில் பிளாஸ்டிக் தோல் உருவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லண்டனைச் சேர்ந்த அழகு கலைஞர் சிரின் முராத் என்ற 25 வயது பெண் ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக பல்கேரியா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரை ஒன்றில் அந்த பெண் 21 டிகிரி செல்சியஸ் வெயிலில் 30 நிமிடங்கள் படுத்து ஓய்வு எடுத்துள்ளார். சிரின் முராத் அரை மணிநேரத்திற்கு பிறகு எழுந்து பார்த்தபோது, அவரது முகம் முழுவதும் சிவந்து புண் தோன்றியது. 


இதையடுத்து அந்த பெண் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து அன்றைய விடுமுறைநாளை உற்சாகமான கொண்டாடியுள்ளார். அடுத்த நாள் சிரின் முராத் கண்விழித்தபோது அவரது முகம் முழுவதும் எதோ ஒன்று இறுக்கி பிடித்ததுபோல உணர்ந்துள்ளார். 


மேலும் படிக்க : Watch Video : துருக்கியில் இரு வேறு பகுதிகளில் கோர விபத்து.! 32 பேர் பரிதாப உயிரிழப்பு.!


அதை தொட்டு பார்த்தபோது முகத்தின் நெத்தியில் இறுக்கிப்போன "பிளாஸ்டிக்" இருப்பது போல் இருந்துள்ளது. இதன் காரணமாக பயந்துபோன சிரின், உடனடியாக தனது முகம் குறித்து குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில், அந்த இறுக்கிபோன நெத்தி முழுவதும் தோல் உரிய தொடங்கியுள்ளது. 




இதுகுறித்து சிரின் முராத் சருமம் உரிக்கத் தொடங்கியபோது கொஞ்சம் நன்றாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், முதலில் இந்த தோல் பிரச்சனை எனக்கு வலியை கொடுத்தது. முகம் முழுக்க இறுக்கி வலியை கொடுத்தது. அடுத்த நாள் இறுக்கிபோன தோல் உரிக்க தொடங்கியதும் நான் கொஞ்சம் நன்றாக உணர தொடங்கினேன். என் தோல் இப்போது நன்றாக இருக்கிறது. முன்பை விட நன்றாக இருக்கிறது என்றும், கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டதைப் போல உணர்கிறேன் என்றும் தெரிவித்தார். 


மேலும் படிக்க : India Economic Growth: தொடரும் உலகளாவிய அதிர்வுகள்...நீடித்த வளர்ச்சியில் இந்தியா பொருளாதாரம்...ரிசர்வ் வங்கி விளக்கம்


சிரினின் முகம் பழைய தோற்றத்திற்கு வர கிட்டதட்ட ஏழு வாரங்கள் ஆகியுள்ளது. இப்போது அவரது கன்னங்களிலும், கண்களுக்குக் கீழே மட்டும் சில தோல் பிரச்சனை இருந்து வருகிறது, அதுவும் விரைவில் சரியாகிவிடும் என்றார். இந்த தோல் பிரச்சனை தொடர்பாக இவர் எந்த ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க : AsiaCup 2022: ஆசிய கோப்பைக்கான அணிகள் தயார்.. கோப்பையை வெல்ல எந்த அணிக்கு வாய்ப்பு!


தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் நன்றாக இருக்குறீர்கள் என்றும், உங்கள் சருமத்திற்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தால் அது தவறு. உங்களுக்கு தேவைப்படும்போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது நிச்சயமாக தேவைப்படும். என் விஷயத்தில் நான் வழக்கமாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவேன். அன்றைய நாளில் பயன்படுத்த மறந்துவிட்டேன். 


இதுகுறித்து விழிப்புணர்வு தெரிவிக்கவே இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் வெறும் 21ºC வானிலையால் ஏற்பட்டது. அதேசமயம் தான் வசிக்கும் லண்டனில் தற்போது 40ºC வெப்பநிலையை எட்டியதாக தெரிவித்தார்.