மத்திய புளோரிடா பல்கலைக்கழக வளாகத்திற்கு மேற்கே உள்ள ஆரஞ்சு கவுண்டியில் ஒரு விமானம் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதை, ஆரஞ்சு கவுண்டி தீயணைப்பு துறையினர் உறுதி செய்துள்ளனர். University Boulevard and N. Econlockhatchee Trail பகுதியில் விமானம் கீழே விழுந்தது.






வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் எண்ணின் மூலம், ​​1956 செஸ்னா 182 என்ற விமானம் லாங்வுட்டில் உள்ள ஏரியல் மெசேஜஸ் லீசிங்குக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.


விமான நிறுவனத்தின் தலைவர், 40 வயதான ரெமி கொலின், இதுகுறித்து நியூஸ் 6 இடம் கூறுகையில், "தரையிறங்கும் நேரத்தில், குறிப்பிட்ட அந்த விமானம் பராமரிப்பு விமானமாக இருந்து வந்துள்ளது. என்ஜின் செயலிழப்புதான் காரணம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது நான் விமானத்தில் இருந்தேன்.


 






சம்பவத்தை நேரில் பார்த்த அமண்டா ஸ்கூபா, "நாங்கள் காரை ஓட்டி செல்லும்போது, ​​விமானம் மிகவும் தாழ்வாக வருவதை கண்டோம். முதலில், அது மிகவும் தாழ்வாகப் பறக்கிறது என்று நினைத்தோம். பின்னர் திடீரென்று அது எங்களை நோக்கி வந்தது. கடைசி நொடியில் அது சாலையின் மறுபுறம் நகர ஆரம்பித்தது" என்றார்.


சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு நபரான ராயா காலின்ஸ், "ஒரு கணம், பறக்க வேண்டிய உயரத்தை விட சற்று கீழே குறைவாக பறந்தது போல தெரிந்தது. முதலில், அது பறந்தபடி இருந்தது. பின்னர் அது கீழே விழுந்தது. கார்கள் அனைத்தும் அப்படியே நின்றுவிட்டன. நான் அதை வீடியோவாக எடுக்க விரும்பினேன். நான் 911 ஐ அழைக்க ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்கள் கார்களில் இருந்து இறங்கி அதை நோக்கிச் சென்றனர்" என்றார்,


விமானம் கீழே விழுந்தபோது அதில் விமானியைத் தவிர வேறு யாரும் இல்லை என்று விசாரணை அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புளோரிடா நெடுஞ்சாலை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "தரையிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள் இரண்டு பனை மரங்களை சிக்கி கொண்டது. மேலும் விமானத்தின் முன்பகுதி அருகிலுள்ள வீட்டின் சுவருக்கு சிறிய சேதத்தை ஏற்படுத்தியது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.