கடும் பனி:


ஆஸ்திரேலியாவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடும் வெயில் வாட்டி வந்தது. கோடை காலங்கள் முடிந்து தற்போது, சில நாட்களுக்கு முன்பு குளிர்காலம் தொடங்கியது




சிட்னியில் பனி:  


ஆஸ்திரேலியாவில் குளிர்காலம் தொடங்கியதையொட்டி, சிட்னி நகரில் கடும் பனி நிலவ தொடங்கியுள்ளது. சிட்னி நகரில் நிலவி வரும் மூடுபனியால், நகரில் உள்ள வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் பனியால் மூடப்பட்டன. இந்நிலையில் அதிகாலை கடுமையான மூடுபனி நிலவியது. இதனால் எதிரே வரும் ஆட்கள், கட்டிடங்கள் கண்ணுக்‍கு புலப்படாத வகையில் பனி படந்தது. கடும் பனிமூட்டத்தால் நகரில் உள்ள வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவு சின்னங்களும் பனியால் மூடப்பட்டன.






இந்தியாவிற்கு கோடை காலம்; ஆஸ்திரேலியாவிற்கு குளிர்காலம்:


ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் கடும் பனி பொழிவு வரும் நிலையில், இந்தியாவிற்கு கோடை காலமாகும். இந்தியாவிற்கு குளிர்காலம் உள்ளபோது, ஆஸ்திரேலியாவில் கோடை காலமாகும்.இதற்கு காரணம், இந்தியா வட அரைக்கோளத்தில் உள்ளது; ஆஸ்திரேலியா தென் அரை கோளத்தில் உள்ளது. சூரியனின் கதிர்கள் வட அரைக்கோளத்தில் இருந்து தென் அரை கோளத்தில் பயணம் செய்வதாலும் இது போன்ற வானிலை மாற்றத்திற்கு காரணமாக உள்ளன.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண