கொரோனா பாதிப்பு நெருக்கடியில் இருக்கும் இந்தியாவுக்கு உதவ பிரிட்டன் முன்வந்திருக்கிறது. இதன்படி முதற்கட்டமாக இந்தியாவுக்கு 600 மருத்துவக் கருவிகள் அனுப்பப்படும் என அந்த நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அவை வருகின்ற செவ்வாய் அன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து சேரும்.


தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை இந்தியாவுக்குத் தற்போது ஏற்றுமதி செய்யமுடியாது என அமெரிக்கா கூறியிருந்த நிலையில் பிரிட்டன் உதவிக்கரம் நீட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Also Read: தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம் சிக்கலானது - பொருளாதார நிபுணர் அர்விந்த் சுப்பிரமணியன்..