Reddit துணை நிறுவனர் அலெக்சிஸ் ஒஹானியன், “நான் செரீனா வில்லியம்ஸின் கணவர் என அடையாளப்படுத்தப்படுவதில் மகிழ்ச்சியே. அதில் எந்த வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார். செரீனாவின் கணவராகவே அடையாளப்படுத்தப்படுகிறீர்களே என்னும் கேள்விகள் அவருக்கு வருவதாகவும், அதனால் தான் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். “நான் ஒரு நாள் பில்லியனராக மாறுவேன். அப்போதும் பலர் என்னை செரீனாவின் கணவராகவோ அல்லது ஒலிம்பியாவின் அப்பாவாகவோதான் அடையாளப்படுத்துவார்கள், அது எனக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்திருக்கிறார். அலெக்சிஸ் ஒஹானியனும், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸும் 2017 திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒலிம்பியா என்றொரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


2019-ஆம் ஆண்டு ஜனவரியில், ``அடுத்த வருடத்தில் காலடி எடுத்துவைக்கிறேன். உழைக்கும் பெற்றோர்களான நாம் என்ன செய்ய முடியும் என்று யோசிக்காமல், நிச்சயமாக இதைச் செய்தே ஆக வேண்டும் என்பதை மனதில் கொள்வோம். எதுவும் சாத்தியம்தான். இந்த வருடத்தின் முதல் ஆட்டத்துக்காக நான் தயாராகிக்கொண்டிருக்கும் இதே வேளையில், என் அன்பு மகள் ஒலிம்பியா ஒஹானியன் அம்மாவின் அன்புக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். போட்டிகளுக்காக தயாராகும் எந்த நேரத்தையும் வார்ம் அப் செய்வதோ, ஸ்ட்ரெச்சோ அவளை அணைத்தபடியே இந்த நேரத்தைக் கடக்கிறேன். குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு உழைக்கும் அம்மாக்களும் அப்பாக்களும் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது கதைகளைக் கேட்கும்போது எனக்கு அளவற்ற ஊக்கம் கிடைக்கிறது. இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கெல்லாம் நன்றி. இந்த வருடம் உங்களுக்கானது” - குழந்தை பிறப்புக்கு பின்பு வேலைக்கு போகும் தாயாக, சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக தனது மகள் ஒலிம்பியா அலெக்சிஸை அணைத்தபடியே ஸ்ட்ரெச் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார் செரீனா வில்லியம்ஸ்.


தனது ஃபிட்னெஸுக்காக, ஆண் என அடையாளப்படுத்தப்பட்டபோதும் அவரது கறுப்பின அடையாளத்துக்காக இன வெறுப்பின் வார்த்தைகளை எதிர்கொண்டபோதும் மோசமான ட்ரோல்களைச் சந்தித்தபோதும் 36 வயதில் குழந்தை பிறந்த 10 மாதத்தில், 24-வது கிராண்ட் ஸ்லாமை வெல்லக் களமிறங்கியவர் செரீனா.