நூலகம் என்றால் வாசிப்பு எப்படி நினைவுக்கு வருமோ அப்படியே புத்தகத் திருடர்களும் நினைவுக்கு வருவார்கள். உதயநிதியின் மனிதன் படத்தில் புத்தக திருட்டில் ஈடுபடும் ஏமி ஜாக்சனை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
சிலருக்கு என்னதான் சொந்தமாக புத்தகம் வாங்கினாலும் இப்படி புத்தகத்தை திருடும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலர் நண்பர்களிடம் இரவலாக வாங்கிய புத்தகங்களைக் கொண்டே ஒரு நூலகமே வைத்திருப்பார்கள். இதனால் சிலர் தங்கள் வீட்டு நூலகத்தில் புத்தகங்கள் இரவலாக பகிரப்படாது என்று எழுதி வைத்திருப்பார்கள்.
பீடிகை போதும்.. நாம் விஷயத்துக்கு வருவோம்!
அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாண்ட்தில் உள்ள ஒரு நூலகத்தில் இருந்து இரவலாக எடுத்த புத்தகம் ஒன்றை 46 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நபர் திருப்பி அளித்துள்ளார். 4 தசாப்தங்களுக்குப் பின்னராவது மனம் மாறி அந்த நபர் புத்தகத்தைத் தந்ததை பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன? அதனால் ஓக்லஹாமா மாகாணத்தில் தி ஓவாசோ நூலகம்.
இது தொடர்பாக அந்த நூலகம் ஃபேஸ்புக்கில் பாராட்டை வெளியிட்டுள்ளது. இந்த நூலை எடுத்த நபர் அதை செப்டம்பர் 8, 1976ல் நூலகத்தில் திருப்பி ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஓவாசோ நூலகம் தனது ஃபேஸ்புக் போஸ்டில், ஆனி ஆனி புத்தகப் பிரதியை திருப்பி ஒப்படைத்த நபர் யாராக இருந்தாலும் அவருக்கு எங்களின் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புத்தகத்தை அந்த நபர் மத்திய நூலகத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு ஒப்படைத்திருக்க வேண்டும். என்ன 46 வருடங்களுக்குப் பின்னர் அந்த நபர் திருப்பி ஒப்படைத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளது. மேலும் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் அந்த நூலகம் பகிர்ந்துள்ளது. மோலி கோன் என்ற எழுத்தாளர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். மார்வின் ஃப்ரீடுமேன் என்பவர் இப்புத்தகத்தில் படங்களை வரைந்திருப்பதாக அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அட்டைப் படத்தில் சிறுமி ஒருவர் கன்னத்தில் கைவைத்தபடி ஏதோ சிந்தனையில் இருப்பது போல் காட்சியளிக்கிறார்.
இந்த சம்பவத்தை தொடர்புபடுத்திப் பார்த்தால் எப்போது என்னை என் வீட்டில் (நூலகத்தில்) சேர்ப்பாய் என்று அந்த புத்தகத்தை எடுத்துச் சென்ற நபரைக் கேட்பதுபோல் உள்ளது என்று கதை சொல்லலாம்.
ஓவாசோ நூலகம் தனது ஃபேஸ்புக் பதிவின் கீழ் கமென்ட் செக்ஷனில் ஒரு கவனிக்கத்தக்க விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், "புத்தகத்தை தாமதமாக தருவதால் அபராதம் விதிக்கப்படுமோ என்று யாரும் வருந்த வேண்டாம். இந்தப் புத்தகத்தை கணினிகள் நூலகங்களில் செயல்பாட்டுக்கு வரும் காலத்திற்கு முன்பே ஒருவர் எடுத்துள்ளார். இருப்பினும் அவர் திருப்பியளிக்க நூலகம் எந்த அபராதமும் விதிக்கவில்லை. அதனால் புத்தகங்களை நீண்ட காலமாக திருப்பி அளிக்காதவர்கள் இதை ஒரு ஊக்கமாக எடுத்துக் கொண்டு திருப்பி அளிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.
இந்த போஸ்ட் முதன்முதலாக மே 27ல் பகிரப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து இந்தப் பகிர்வை 1000 கணக்கானோர் லைக் செய்து ஷேர் செய்துள்ளனர்.