பஞ்சாப் காவல்நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமாபாத் காவல்நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் திடீரென பயனக்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் காவல்நிலையத்தை சுற்றி இருந்த மக்கள் வெடி விபத்து நிகழ்ந்துவிட்டதாக எண்ணி திரண்டு ஓடினர். இதனால் அப்பகுதியே பதற்றம் ஆனது. ஆனால் அங்கு நடந்தது வெடி விபத்து இல்லை என தெரியவந்துள்ளது.
மேற்கூரை மீது விழுந்த கனமான பொருளால் அந்த சத்தம் கேட்டது என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “காவல் நிலையத்தில் வெடி விபத்து எதுவும் நிகழவில்லை. காவல்நிலையத்திற்கு வெளியே இருக்கும் தற்காலிக சோதனை சாவடியின் மேற்கூரை மீது கனமான பொருள் விழுந்தது. அதனால் தான் அந்த சத்தம் கேட்டது. இதனால் சோதனை சாவடி மீது போடப்பட்டிருந்த இரும்பு சீட் சேதமடைந்துள்ளது. காயம் யாருக்கும் ஏற்படவில்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.