உலகப்பணக்காரர்களில் ஒருவரான பிட்கேஸின் மகள் ஜெனிபர், தன்னுடைய திருமணத்தின் போது எடுத்தப் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


நாம் ஏதாவது ஆசைப்பட்டு கேட்கும் போது நீ என்ன பில்கேட்ஸ் மகளா,… உனக்கெல்லாம் எதுக்கு அது என்று விளையாட்டாகக்கூறுவார்கள். ஆனாலும் அவர்களால்  தன்னுடைய குழந்தைகளுக்கு செய்வதை பெற்றோர்கள் சிறம்படச்செய்வார்கள். இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழலுக்கும் ஏற்றவாது பெண் அல்லது ஆண் மகனின்  திருமணம் போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டும் போதே பிரம்மாண்டமாக இருக்கும். அதுவே உலக பணக்காரர்களில் ஒருவரான பிட்கேஸின் மகள் என்றால், சொல்லவா வேண்டும்… பல கோடி ரூபாய் செலவழித்து பிரம்மாண்டாய் நடந்துமுடிந்துள்ளது.





உலகில் 4 வது பணக்காரர்களில் ஒருவர் தான் பில்கேட்ஸ். தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படும் அனைவருக்கும் எப்படியாவது பிட்கேஸ் மாதிரி ஒருநாளைக்கு வந்துவிடமாட்டோமா என்பது தான் கனவாக இருக்கும்.. இப்படி அனைவரிடம் புகழ் பெற்ற இவர் மெலிண்டா கேட்ஸ் என்பவரைத் திருமணம் செய்து 27 ஆண்டுகள் ஆன நிலையில்  இவருக்கு ரோரி ஜான் என்ற மகனும், ஜெனிபர், போபே அடிலெ என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சந்தோசமாக வாழ்க்கை நடந்துவந்த நிலையில் தான், 27 ஆண்டுகளுக்கு பிறகு பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் பொதுப்பணிகளைச்சேர்ந்து செய்வோம் எனவும் திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தார். தற்போது இருவரும் விவகாரத்து செய்திருந்தாலும் அவர்களின் பெண் குழந்தை ஜெனிபரின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியுள்ளனர்.


ஜெனிபர் கேட்ஸ எகிப்து நாட்டைச்சேர்ந்த குதிரைப் பந்தய வீரரான நேயல் நாசர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நேயல் நாசர் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று டோக்கிய ஒலிம்பிக் போட்டியில் எகிப்து சார்பில் கலந்துக்கொண்ட பெருமைக்குரியவராக இருந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஜெனிபர் – நேயல் நாசர் ஆகியோரின் திருமணம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பண்ணையில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 2 மில்லியன் செலவில் நடைபெற்ற திருமணத்தின் புகைப்படத்தை ஜெனிபர் கேட்ஸ் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.


 






மேலும் இந்த திருமண விழாக்குறித்து பிட்கேஸின் மகள் ஜெனிபர் தெரிவிக்கையில், கொரோனா காலக்கட்டம் என்பதால் மிகுந்த பாதுகாப்போடு திருமணம் நடைபெற்றது எனவும், 100 ஏக்கர் பரப்பில் உள்ள பண்ணை முழுவதும் கூடாரங்கள் அமைத்து , மலர்களால் வழி நெடுகிலும் வரவேற்புகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த திருமண விழாவில் சுமார் 300 விருந்தினர்கள் கலந்துக்கொண்டிருந்த நிலையில், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியப்பிறகே அனுமதிக்கப்பட்டார்கள் என கூறியிருந்தார். மேலும் திருமணத்தின் போது நாட்டுப்புற இசைக்கச்சேரி மற்றும் விருந்துகள் களைக்கட்டியிருந்ததாம். அப்படி அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் நடைபெற்ற திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.