யு.ஒய். ஸ்கூட்டி: 


நமது விண்மீன் மண்டலத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய நட்சத்திரம் மற்றும் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒன்று, யுஒய் ஸ்கூட்டி. யுஒய் ஸ்கூட்டியானது சூரியனை விட 1,700 மடங்கு பெரியது.


சூரியனை விட பத்து மடங்கு நிறை மற்றும் 100,000 மடங்கு பிரகாசமானது. யுஒய் ஸ்கூட்டிக்குள் 5 பில்லியனுக்கும் அதிகமான சூரியன்களை நீங்கள் பொருத்த முடியும், இதிலிருந்து, இந்த நட்சத்திரம் உண்மையில் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைக் காட்டுகிறது.  


விஐ கேனிஸ் மேஜரிஸ் - VY Canis Majoris:  


விஐ கேனிஸ் மேஜரிஸ் என்ற நட்சத்திரமானது, நமது சூரியனைவிட ஆயிரத்து 500 மடங்கு பெரியது. மேலும், இது சூரியனை விட 400,000 மடங்கு பிரகாசமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆர் டபிள்யு செபே RW Cephei:


ஆர் டபிள்யு செபே ( RW Cephei ) என்பது 3,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Cepheus விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு மஞ்சள் நிற நட்சத்திரம் என கூறப்படுகிறது. இது சூரியனை விட 1,530 மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


Also Read: Mars Real Photos: செவ்வாய் கிரகத்தின் உண்மையான புகைப்படங்கள்...சமீபத்தில் நாசா ரோவர் கிளிக் செய்தது...


 வி355 செபே ( V354 Cephei ):


V354 Cephei என்பது 8,900 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Cepheus விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு சிவப்பு நட்சத்திரமாகும். சூரியனை விட ஆயிரத்து 520 மடங்கு பெரியது. இது சூரியனை விட 400,000 மடங்கு பிரகாசமான ஒளிர்வு தன்மை கொண்டதாகும். 


KY Cygni கேஒய் சைக்னி: 


KY Cygni என்பது 5,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிக்னஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள ஒரு சிவப்பு சூப்பர்ஜெயண்ட் நட்சத்திரமாகும். கே.ஒய். சைக்னி சூரியனை விட 1,430 மடங்கு பெரியது மற்றும் 273,000 மடங்கு பிரகாசமானது. அதன் பிரகாசமாக இருந்தபோதிலும், ஹைட்ரஜனின் அடர்த்தியான மேகத்தில் மறைந்துள்ளதால், அது நமக்கு தெரியவில்லை.


Also Read: Beautiful waterfalls: இந்தியாவில் உள்ள அழகான 10 நீர்வீழ்ச்சிகள்! இதோ பட்டியல்!